புரோப்பனாயிக் நீரிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோப்பனாயிக் நீரிலி
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பனாயிக் நீரிலி
வேறு பெயர்கள்
புரோப்பியானிக் நீரிலி
புரோப்பனாயில் புரோப்பனோயேட்டு
இனங்காட்டிகள்
123-62-6 Y
ChemSpider 29003 N
InChI
  • InChI=1S/C6H10O3/c1-3-5(7)9-6(8)4-2/h3-4H2,1-2H3 N
    Key: WYVAMUWZEOHJOQ-UHFFFAOYSA-N N
  • InChI=1/C6H10O3/c1-3-5(7)9-6(8)4-2/h3-4H2,1-2H3
    Key: WYVAMUWZEOHJOQ-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31263
வே.ந.வி.ப எண் UF9100000
SMILES
  • CCC(=O)OC(=O)CC
பண்புகள்
C6H10O3
வாய்ப்பாட்டு எடை 130.14 கி/மோல்
தோற்றம் நீர்மம், வினீகரின் மணம்
அடர்த்தி 1.015 கி/செ.மீ3, நீர்மம்
உருகுநிலை −42 °C (−44 °F; 231 K)
கொதிநிலை 167 முதல் 170 °C (333 முதல் 338 °F; 440 முதல் 443 K)
வினைபுரிந்து புரோப்பனாயிக் அமிலம் உருவாகும்
பிசுக்குமை 1.144 cP at ?°C
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பிடிக்கும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R34
S-சொற்றொடர்கள் S26-45
தீப்பற்றும் வெப்பநிலை 63 °C (145 °F; 336 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

புரோப்பனாயிக் நீரிலி (Propanoic anhydride) என்பது (CH3CH2CO)2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த எளிய அமில நீரிலி நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. கரிமத்தொகுப்பு வினைகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

புரோப்பனாயிக் அமிலத்தை கீட்டீன் சேர்மத்தைப் பயன்படுத்தி நீர்நீக்க வினைக்கு உட்படுத்தி புரோப்பனாயிக் நீரிலியைத் தயாரிக்கிறார்கள்:[1]

2 CH3CH2CO2H + CH2=C=O → (CH3CH2CO)2O + CH3CO2H

பாதுகாப்பு[தொகு]

கடுமையான நெடியும் அரிக்கும் தன்மையும் கொண்டதாக புரோப்பனயிக் நீரிலி காணப்படுகிறது. தோலின் மீது பட நேர்ந்தால் தீப்புண்கள் உண்டாகும். கண்கள், நுரையீரல் ஆகியவற்றிலும் புரோப்பனாயிக் நீரிலியின் ஆவி கடுமையான பாதிப்புகளை உருவாக்கும்.

சட்ட அங்கீகாரம்[தொகு]

பென்டானில் மற்றும் பென்டானில் வழிப்பொருட்களைத் தயாரிப்பதில் ஒரு முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுவதால் புரோபனாயிக் நீரிலியைப் பயன்படுத்துவது முறைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து அமுலாக்க நிர்வாக அமைப்பு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் சட்டத்தின்படி புரோப்பனாயிக் நீரிலியை பட்டியல் 1 வகைப் பொருட்கள் எனப்பட்டியலிட்டுள்ளது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Williams, J. W. Krynitsky, J. A. (1955). "n-Caproic Anhydride". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0164. ; Collective Volume, vol. 3
  2. "Drugs of Abuse Publication, Chapter 2". Archived from the original on 2007-12-20. பார்க்கப்பட்ட நாள் 2017-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பனாயிக்_நீரிலி&oldid=3564237" இலிருந்து மீள்விக்கப்பட்டது