புனித மேரி தேவாலயம், கோட்டயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மேரி தேவாலயம், கோட்டயம்
St. Mary’s Malankara Orthodox Syrian Church, Kottayam
Kottayam Cheriapally Mahaedavaka
நாடுஇந்தியா
சமயப் பிரிவுமலங்கரா மரபுவழி சிரிய தேவாலயம்
வரலாறு
நிறுவப்பட்டது1579
Architecture
கட்டடக் வகைபாரசீகம் மற்றும் கேரள கட்டக்கலை
கோட்டயம் செரியப்பள்ளி தேவாலயம்

கோட்டயம் புனித மேரி மரபுவழி சிரிய தேவாலயம், பொதுவாக கோட்டயம் செரியப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் கேரளத்தின் கோட்டயத்தில் அமைந்துள்ள ஒரு மலங்கரா மரபுவழி சிரிய தேவாலயம் ஆகும்.[1] [2] [3] 'சிறிய தேவாலயம்' என்று பொருள்படும் செரியப்பள்ளி, என்ற பெயரானது இதன் தோற்றத்துக்கும் பெயருக்கும் முரணானது, இது மாநிலத்தின் பழமையான மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட தேவாலயங்களில் ஒன்றாகும். கோட்டையத்திலிருந்து குமரகம் செல்லும் வழியில் செரியப்பள்ளி அமைந்துள்ளது. தேவாலயம் தாய் மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 440 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயமானது சுற்றுச்சூழல் மாற்றங்களுக்குப் பிறகும் அதன் பழைங்கால அழகைத் தக்க வைத்துக் கொண்ட கட்டிடக்கலை ஆகும். தேவாலயத்தின் நீள, அகலங்களில் புதுமையான சுவரோவியம் மற்றும் கட்டிடக்கலை சிறப்புகளைக் கொண்டதாக உள்ளது.

வரலாறு[தொகு]

நடு திருவிதாங்கூரில் கிறித்தவத்தின் பரவல், வளர்ச்சி தொடர்பான பல கதைகள் மற்றும் புனைவுகள் இந்த தேவாலயத்தை தொடர்புபடுத்தி பரவலாக உள்ளன. இது குறித்து நிலவும் கதை என்னவென்றால், தெக்கம்கூர் (பழைய கோட்டயம்) மன்னர்கள் கிறிஸ்தவர்கள் தங்கள் ராஜ்யத்தில் வாழ்ந்து வருவதில் மகிழ்ச்சி அடைந்தனர், ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்வுக்கு பொருளீட்ட கடுமையாக உழைப்பதில் உறுதியோடு வாழ்ந்தனர். அந்தக் காலகட்டத்தில் இராச்சியத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் கோத்தவர்மன், எந்த வரியும் விதிக்காமல், தேவாலயத்தை கட்டுவதற்கான நிலத்தை அவர்களுக்கு வழங்கினார். இங்கு முதன்முதலில் 1550 ஆம் ஆண்டில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. இதற்கு வாலியப்பள்ளி என்று பெயரிடப்பட்டது. இருப்பினும், பின்னர் திருச்சபையில் இன அடிப்படையில் பிளவு ஏற்பட்டது. அதிருப்தியாளர்கள் 1579 இல் செரியப்பள்ளியைக் கட்டினர். ஒரே கிராமத்தில் இரண்டு வழிபாட்டுத் தலங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், இதனால் இரு தேவாலயங்களும் இருக்க வசதியாக மன்னர் கிராமத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டியிருந்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த தேவாலயம் 1579 இல் போர்த்துகீசிய கட்டிடக் கலைஞர் ஆண்டனியின் குழுவினரும் தெக்கம்கூர் இராச்சியத்தின் (பழைய கோட்டயம்) கைவினைஞர்களும் இணைந்து கட்டுமானப் பணிகளில் ஊடுபட்டனர். இருப்பினும், தேவாலயத்தில் வழிபாட்டு முறையில் போர்த்துகீசியர்கள் எந்த செல்வாக்கும் செலுத்தவில்லை. இது பொதுவாக சிரியன் கிறிஸ்தவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. செரியப்பள்ளிக்கு வருபவர்கள், இந்த தேவாலயத்தின் கட்டிடக்கலை கேரளத்தின் சில கோயில்களின் கட்டிடத்தை பெரிதும் ஒத்திருப்பதாக உணரலாம். உண்மை என்னவென்றால், அந்தக் காலத்தில் கோயிலா அல்லது தேவாலயமா என வேறுபடுத்தாமல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒரே மாதிரியாக கட்டியுள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. The Chaldean Syrian Church of the East (in ஆங்கிலம்). ISPCK. 1983.
  2. An Outline History of Christian Churches and Denominations in Kerala (in ஆங்கிலம்). Thomas. 1977.
  3. The Christians of Kerala: A Brief Profile of All Major Churches (in ஆங்கிலம்). A.K. Thomas. 1993.

வெளி இணைப்புகள்[தொகு]