புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா

ஆள்கூறுகள்: 10°20′24″N 76°12′53″E / 10.339949°N 76.214802°E / 10.339949; 76.214802
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா
குறிக்கோளுரைவாழ்க்கை, ஒளி மற்றும் அன்பு
வகைதன்னாட்சிக் கல்லூரி
உருவாக்கம்1964; 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1964)
சார்புதேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
முதல்வர்முனைவர் சிஜி
மாணவர்கள்3000+
அமைவிடம், , ,
680121
,
10°20′24″N 76°12′53″E / 10.339949°N 76.214802°E / 10.339949; 76.214802
வளாகம்புறநகர்
மொழிஆங்கிலம்
சேர்ப்புகோழிக்கோடு பல்கலைக்கழகம்
இணையதளம்www.stjosephs.edu.in/%20கல்லூரி%20இணையதளம்
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா is located in கேரளம்
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா
Location in கேரளம்
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா is located in இந்தியா
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா (இந்தியா)

புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா அல்லது புனித வளனார் மகளிர் கல்லூரி, இரிஞ்ஞாலகுடா (St. Joseph's College, Irinjalakuda) என்பது [1] இந்தியாவின் கேரள மாநிலத்தின் இரிஞ்ஞாலகுடாவில் 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த[2] இக்கல்லூரி, தற்போது தன்னாட்சி கல்லூரியாக, 19 ஏக்கர் வளாகத்தில் பரந்து விரிந்திருக்கும் ஒரு கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவனமாகும்.


இந்த கல்வி நிறுவனத்தில் 3000+ மாணவர்கள், 150+ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், 40+ படிப்புத்திட்டங்கள் மற்றும் 35+ மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள் ஆகியவை உள்ளன.[3]

வரலாறு[தொகு]

1914 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திருக்குடும்ப சபையின் புனித சூசையப்பர் கல்வி சங்கத்தால் பெண்களின் முழுமையான வளர்ச்சிக்காக மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்குவதற்கான கொள்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, இன்னமும் அதே சங்கத்தாலேயே நிர்வகிக்கப்படுகிறது. இந்த சங்கமானது புனித மரியம் திரேசியாவால் ஆரம்பிக்கப்பட்டதாகும், இவர், ஏப்ரல் 9, 2000 அன்று மரணமடைந்துள்ளார்.

1999 ஆம் ஆண்டில், அறிவியல் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான முன்னோடி மையமாக விளங்கும் வகையில் இந்த கல்லூரியில் உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவப்பட்டது[4], அதனடிப்படையில் இளங்கலை உயிரித் தொழில்நுட்ப படிப்பு தொடங்கப்பட்டுள்ளது,பின்னர், கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைந்து,2004 ஆம் ஆண்டில் முதுகலை உயிரி தொழில்நுட்பப் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. [5] இம்மாநிலத்தில், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் உயிரி தொழில்நுட்பப் படிப்பினை அரசு உதவியோடு வழங்கும் ஒரே கல்வி நிறுவனம் என்ற பெருமையை இக்கல்லுரி பெற்றுள்ளது.[6] அத்தோடு கேரளாவில் மக்கள் தொடர்பு மற்றும் பத்திரிகையில் முதுகலை திட்டத்தை வழங்கிய முதல் பெண்கள் கல்லூரி என்ற பெருமையும் இக்கல்லூரிக்கே உரித்தாகும்.

அங்கீகாரம்[தொகு]

24 ஜனவரி 2023 அன்று, 2016 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவினால் (UGC) தன்னாட்சி நிறுவனமான அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது 2023 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) அதன் நான்காவது சுழற்சியில் 4 புள்ளிகளுக்கு 3.66 CGPA மதிப்பெண்களைப் பெற்று ஏ++ தரத்துடன் மறுஅங்கீகாரம் பெற்றுள்ளது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • நீதிபதி எம்.ஆர்.அனிதா, நீதிபதி, கேரள உயர்நீதிமன்றம்.
  • மருத்துவர் கதீஜா மும்தாஜ், மருத்துவ பயிற்சியாளர், ஆசிரியர்.
  • இரண்டாவது விஜயன் அமைச்சரவையில் உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சராயிருந்த ஆர்.பிந்து .
  • ஆலிஸ் ஜி வைத்யன், இந்தியக் காப்பீட்டுத் துறையில் முதல் பெண் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.
  • ரேகா மேனன், துணைத் தலைவர் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Calicut University affiliated Colleges". பார்க்கப்பட்ட நாள் 18 October 2013.
  2. "கோழிக்கோடு பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் - 2023".
  3. "മാധ്യമരംഗത്ത്‌ സ്‌ത്രീശാസ്‌തീ കരണം" മാധ്യമ സെമിനാര്‍ നടന്നു". பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
  4. "Department of Biotechnology, St. Joseph's College, Irinjalakuda".
  5. "College Development Council (CDC), University of Calicut, Kerala, Inbdia".
  6. "Higher Education Department Portal of Govt. of Kerala".