புத்தனைப் போற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தனைப் போற்றும் தொடர்கள் மணிமேகலை நூலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. மணிபல்லவத் தீவில் கோமுகி என்னும் பொய்கையில் புத்தர் பிறந்த நாளில், உணவு அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியை மணிமேகலை பெற்றாள். பசிப்பிணி நீக்கும் பாத்திரம் அது. தீவதிலகை வாயிலாக அதனைத் தனக்கு அளித்த புத்தர் தெய்வத்தை, மணிமேகலை போற்றும் வரிகள் இவை:

மாரனை வெல்லும் வீர நின்அடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி
பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி
எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி
கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி
தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்அடி
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி
நரகர் துயர்கெட நடப்போய் நின்அடி
உரகர் துயரம் ஒழிப்போய் நின்அடி
வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு
அடங்காது [1]

ஒப்புநோக்கம்[தொகு]

  • தாளை வணங்குதல் [2]
  • நாதன் தாள் வாழ்க [3]
  • ஈசன் அடி போற்றி [4]
  • மணிவண்ணா நின் சேவடி செவ்வி திருக்காப்பு [5]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மணிமேகலை 11 பாத்திரம் பெற்ற காதை 61-72
  2. திருக்குறள் 9
  3. சிவபுராணம்
  4. சிவபுராணம்
  5. பெரியாழ்வார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தனைப்_போற்றல்&oldid=1286483" இலிருந்து மீள்விக்கப்பட்டது