புசுபாவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புசுபாவதி ஆறு
மலர்ப்பள்ளத் தாக்கில் புசுபாவதி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுதிப்ரா பனிப்பாறை
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்அலக்நந்தா ஆறு

புசுபாவதி ஆறு (Pushpawati River) என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள சாமோலி மாவட்டத்தில் உள்ள மலர்ப் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஆறாகும்.

ஆற்றோட்டம்[தொகு]

புசுபாவதி ஆறு இமயமலையில் கர்வால் பகுதியின் மத்தியப் பகுதியில் உள்ள ரதபானுக்கு அருகில் உள்ள திப்ரா பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. இது தெற்கு திசையில் பாய்ந்து ககாரியாவிற்கு அருகில் உள்ள பியுந்தர் கங்கையில் இணைகிறது . இணைந்த பின் உருவாகும் நீரோடை இலட்சுமண் கங்கை என்று அழைக்கப்படுகிறது. இலட்சுமண் கங்கை கோவிந்த்காட்டில் அலக்நந்தா ஆற்றில் கலக்கிறது.[1][2] புசுபாவதி ஆறு மலர்ப் பள்ளத்தாக்கின் வழியாக ஓடுகிறது.[1]

புசுபாவதி ஆற்றின் பனிப்பாறையுடன் கூடிய மேல் பள்ளத்தாக்கு ஆங்கில எழுத்தான “U” வடிவில் காணப்படுகிறது.தடிமனான பனிப்பாறை படிவுகளைக் கடந்து இந்த ஆறு பாய்கிறது. பல பனிப்பாறைகளால் தோன்றிய நீரோடைகள் இதன் மேல் பகுதியில் இணைகின்றன. இது இதன் கீழ்ப் பகுதியில் ஒரு பள்ளத்தாக்கு வழியாகப் பாய்கிறது. மேல் பகுதிகள் நிரந்தரமாகப் பனி மூடி காணப்படுகிறது. பனிநிலை தாவரங்கள் மற்றும் மிதமான வெப்பமண்டல தாவரங்கள் ஆற்றின் நடு மற்றும் கீழ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ளன. மனிதர்கள் இங்கொன்றும் அங்கொன்றும் என வாழ்கின்றனர்.[1]

பெயர்க் காரணம்[தொகு]

புராணக் கதையின்படி, பாண்டவர், வனவாசத்திலிருந்த ஆண்டுகளில், இந்த ஆற்றில் மலர்கள் மிதப்பதைக் கண்டு இதற்கு புசுபாவதி என்று பெயரிட்டனர்.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Negi, Sharad Singh (1991). Himalayan rivers, glaciers and lakes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185182612. பார்க்கப்பட்ட நாள் 2010-06-01.
  2. De Sarkar, Partha. Valley of Flowers and Hemkund Sahib. பார்க்கப்பட்ட நாள் 2010-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புசுபாவதி_ஆறு&oldid=3392064" இலிருந்து மீள்விக்கப்பட்டது