பி. சேக் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. சேக் அலி (B.Sheikh Ali) ஓர் இந்திய வரலாற்றாசிரியராவார்.[1] மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்று, பின்னர் இவர் ஆசிரிய உறுப்பினராக இங்கேயே பணியாற்றினார்..[2] 1954 ஆம் ஆண்டில் அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்திலும், 1960 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.[3] சேக் அலி 55 புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் 12 புத்தகங்கள் உருது மொழியில் இருந்தன.[3] கோவா பல்கலைக்கழகம் மற்றும் மங்களூர் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் துணைவேந்தராக பணியாற்றினார்.University]].[2] இந்தியன் எக்சுபிரசு நாளிதழில் வெளிவந்த ஒரு இரங்கல் செய்தி இவரை ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மற்றும் பிரிட்டிசு அரசாங்கத்தையும் ஆட்சியின் போது மைசூர் இராச்சியத்தின் வரலாறு பற்றி ஆய்வு செய்யும் அதிகாரியாக விவரித்தது.[2]2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Historian B Sheikh Ali passes away". Deccan Herald. 1 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  2. 2.0 2.1 2.2 Kumar, K Shiva (2 September 2022). "Prof Sheikh Ali, scholar and historian, passes away". The New Indian Express. Archived from the original on 4 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  3. 3.0 3.1 "Well-known historian Sheik Ali passes away; leaves behind a sterling legacy". The Siasat Daily. 3 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சேக்_அலி&oldid=3510916" இலிருந்து மீள்விக்கப்பட்டது