பி. எஸ். அப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பு
பிறப்பு1929
தேசியம்இந்தியர்
பணிஆட்சிப் பணியாளர்
அமைப்பு(கள்)ஓய்வு பெற்றஇந்திய ஆட்சிப் பணி

பி. எஸ். அப்பு (P. S. Appu) (1929 - 28 மார்ச்சு 2012) என்பவர் முச்சூரியிலுள்ள லால் பகதூர் சாசுதிரி அரசு குடிமைப்பணி பயிற்சி மையத்தில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார்.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

அப்பு 1951 ஆம் ஆண்டு பீகாரில் இந்திய ஆட்சிப் பணியாளரராக தனது பணியைத் தொடங்கினார்.[2] பீகாரில் இவர் நிதிச் செயலாளராகவும் முதன்மைச் செயலாளராகவும் தர்பங்கா மற்றும் அகார்சா மாவட்ட ஆட்சியாளராகவும் இருந்துள்ளார். அப்பு 1970 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை வேளாண்மை மற்றும் திட்டக் குழு அமைச்சகத்தின் நிலச் சீர்திருத்த ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். லால் பகதூர் சாசுதிரி அரசு குடிமைப்பணி பயிற்சி மையத்தின் இயக்குனராக இருந்தபோது இவர் விருப்ப ஓய்வினைக் கேட்டு பெற்றுக் கொண்டார்.[3]


திட்டக்குழுவால் ஆரம்பிக்கப்பட்ட நிலச் சீர்திருத்த செயற்குழுவின் தலைவராக இருந்போது, நில சீர்திருத்தங்களின் தோல்விக்கு காரணம் அரசியல் சார்ந்த குறைபாடுகளே என்று வெளிப்படையாகக் கூறினார்.[2] இவர் பீகாரின் தலைமைச் செயலராக இருந்துள்ளார்.ஆனால் தலைமைச் செயலராக ஆற்றிய பணிகளை அரசியல் நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இவர் இந்திய அரசின் குறைந்த ஊதிய பணிக்காக தலைமைச் செயலர் பணியை விட்டுச் சென்றார். இந்திய அரசு, குற்றம் செய்த பயிற்சியாளர் ஒருவரை கண்டிக்காததால், லால் பகதூர் சாசுதிரி அரசு குடிமைப்பணி பயிற்சி மையத்தின் இயக்குனராக இருந்த இவர் விருப்ப ஓய்வுக் கேட்டு பெற்றுக் கொண்டார்.[4] இச்செயல் பாராளுமன்றத்தில் சர்ச்சையை உருவாக்கியது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உள்துறை அமைச்சர் கியானி சயில் சிங்கின் பேச்சை ஓரங்கட்டி அப்பயிற்சியாளரை பணிநீக்கம் செய்தார்.[5]

விருது[தொகு]

இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசு வழங்கியது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. IAS legend who put values before protocol
  2. 2.0 2.1 Mander, Harsh. "He recognised the value of dissent". The Hindu (Newspaper). பார்க்கப்பட்ட நாள் 8 April 2012.
  3. Alagh, Yoginder Kumar (4 April 2012). "A Civil Servant's Role Model". The Indian Express (Newspaper). பார்க்கப்பட்ட நாள் 8 April 2012.
  4. Sarma, E.A.S. (14 April 2012). "P.S. Appu - A Tribute" (PDF). The Economic & Political Weekly. Archived from the original (PDF) on 17 April 2012. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012.
  5. "P.S. Appu (Obituary)". Boloji.com. Archived from the original on 13 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "56 receive Padma awards". Archived from the original on 27 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._அப்பு&oldid=3563153" இலிருந்து மீள்விக்கப்பட்டது