பிறையான் நோர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 இல் காங்கிரசின் நூலகத்தில் " கோளிடை ஆய்வு " பேச்சு

பிறையான் டி. நோர்டு ஒரு அமெரிக்க வானியற்பியலாளரும் பெர்மி தேசிய முடுக்கி ஆய்வகத்தில் இயந்திரக் கற்றல் ஆராய்ச்சியாளரும் ஆவார்.

இளமையும் கல்வியும்[தொகு]

நோர்டு விஸ்கான்சினில் வளர்ந்தார்.[1] நோர்டு ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார் , 2003 இல் இயற்பியலில் கலை இளவல் பட்டம் பெற்றார் , மேலும் ஆன் ஆர்போர்னில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப்படிப்புப் பள்ளிக்குச் சென்றார் , அங்கு அவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். நோர்டின் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைக்கு மெய்நிகர் வான் அளக்கைகலும் விண்மீன் கொத்துகளின் பல அலைநீள ஆய்வுகளும் என்ற தலைப்பு உள்ளது.

தொழில் வாழ்க்கை[தொகு]

முனைவர் பட்டம் பெற்ற பிறகு , நோர்டு ஒரு தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (பட்டதாரி கல்விக்கான கூட்டணி, பேராசிரியர்களுக்கான ஆய்வுநல்கையை வென்றார் , மேலும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 2012 ஆம் ஆண்டில் நோர்டு ஃபெர்மி ஆய்வகத்தில் முதுகலை இணைப்பாளராக ஆனார். 2017 ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பீடத்தில் சேர்ந்தார்.

நோர்டு என்பது ஃபெர்மி ஆய்வக இயந்திர நுண்ணறிவு குழுவில் ஒருவர், இது உயர் ஆற்றல் இயற்பியல் - வானியற்பியல் மற்றும் அண்டவியல் ஆகியவற்றில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.[2]

நோர்டின் ஆராய்ச்சி அண்டவியலில் பல பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. அவர் ஈர்ப்பு வில்லைகள் கண்டறிவதற்கான புதிய முறை ஆய்வு , அண்டவியல் ஆய்வு உருவகப்படுத்தலும் வடிவமைப்பும் ஆகியனவாகும்.[3] நோர்டின் படைப்புகள் தி அட்லாண்டிக் சயின்ஸ் சமச்சீர் மற்றும் பிறவற்றில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.[4][3][2][5][6]

பொது ஈடுபாடு[தொகு]

2020 ஜூன் மாதம் ஜார்ஜ் ஃபிலாய்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நோர்டு , சந்தா பிரெஸ்காட், வெய்ன்ஸ்டீன் நீதிக்கான அமைப்புக் குழுவுடன் இணைந்து உலகளாவிய " கறுப்பர் வாழ்க்கை " வேலைநிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்தார்.[7] நீதிக்கான அமைப்புக் குழுவின் சார்பில் " நாம் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் " என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை நோர்டு எழுதியுள்ளார். ஜூன் 10 அன்று வேலைநிறுத்தம் நடந்த நாளில் 4,500 பேருக்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக உறுதியளித்தனர். கூடுதலாக , நேச்சர் இதழ் , அமெரிக்க இயற்பியல் கழ்அம் , அமெரிக்க அறிவியல் முன்னேர்றத்துக்கான கழகம், அமெரிக்க இயற்பியல் நிறுவனம் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.[8]

தகைமைகளும் , விருதுகளும்[தொகு]

  • பட்டதாரி கல்விக்கான கூட்டணி, பேராசிரியர்களுக்கான ஆய்வுநல்கை பெற்று முனைவர் பட்டப் படிப்பு (2010 - 2012)
  • மிச்சிகன் பல்கலைக்கழகம் ராக்கம் தகைமை ஆய்வுநல்கை (2004 - 2010)
  • மிச்சிகன் பல்கலைக்கழகம் மார்செல்லசு எல். வைடென்பெக் கற்பித்தல் விருது (2009)
  • மிச்சிகன் பல்கலைக்கழகம் ஜெர்ரி சோஃபென் தலைமை விருது (2004)
  • கோடர்டு விண்வெளி பறப்பு மைய அறங்காவலர் உதவித்தொகை (2000 - 2003)
  • ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஹெஸ் நினைவு உதவித்தொகை (2000 - 2003)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bio". Postcards from the Edge of the Universe. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  2. 2.0 2.1 Lamb, Evelyn (October 16, 2018). "Studying the stars with machine learning". symmetry magazine. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.Lamb, Evelyn (October 16, 2018). "Studying the stars with machine learning". symmetry magazine. Retrieved February 23, 2019.
  3. 3.0 3.1 "AI is changing how we do science. Get a glimpse". Science. AAAS. 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  4. Sokol, Joshua (2017-10-25). "Using AI to Find a Cosmic Looking Glass". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  5. Skibba, Ramin (2017-01-13). "Computer Science Technique Helps Astronomers Explore the Universe". Inside Science. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  6. Cuff, James (2018-04-16). "GPUs Mine Astronomical Datasets For Golden Insight Nuggets". www.nextplatform.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  7. "Home". Particles for Justice (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-12.
  8. Burke, Lilah (June 11, 2020). "Scientists strike for black lives, a more inclusive academia". www.insidehighered.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறையான்_நோர்டு&oldid=3789970" இலிருந்து மீள்விக்கப்பட்டது