பிரேர்னா கோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர். பிரேர்னா கோலி
Dr. Prerna Kohli
பிறப்பு21 திசம்பர் 1965 (1965-12-21) (அகவை 58)
அலிகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அலிகர் முசுலிம் பல்கலைக்கழகம்
பணிமருத்துவ உளவியலாளர்
சமுக சேவகர்
வலைத்தளம்
www.drprernakohli.in

மருத்துவர். பிரேர்னா கோலி (Prerna Kohli) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவ உளவியலாளர் ஆவார. சமூக சேவகராகவும் எழுத்தாளராகவும் இவர் அறியப்பட்டார். மனநலம் தொடர்பான இவரது பணிக்காக அங்கீகரிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவரால் இந்தியாவின் 100 பெண் சாதனையாளர்கள் விருது பெற்றார்.

தொழில்[தொகு]

பிரேர்னா கோலி அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அரியானா மாநிலத்திலுள்ள குர்கான் நகரத்தில் 1994 ஆம் ஆண்டில் தனது பயிற்சியைத் தொடங்கினார். [1] இந்தியாவின் பத்திரிகை தகவல் பணியகம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் போன்ற பல்வேறு அரசு குழுக்களுக்கு பிரேர்னா கோலி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

உளவியலாளர் சிந்தனைகள் என்ற மனநலம் குறித்த புத்தகத்தை பிரேர்னா கோலி எழுதியுள்ளார். [2] [3] சிறைக் கைதிகள் மற்றும் திகார் சிறை மற்றும் அலிகார் சிறை அதிகாரிகளுக்கு மனநலப் பிரச்சினைகளைச் சமாளிக்க இவர் உதவியுள்ளார். [4]

2016 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நாட்டின் முதல் 100 பெண் சாதனையாளர்களில் ஒருவராக அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ச்சியால் இவர் பாராட்டப்பட்டார். [5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேர்னா_கோலி&oldid=3882387" இலிருந்து மீள்விக்கப்பட்டது