பிரியங்கா சிங் ராவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியங்கா சிங் ராவத்
இந்திய மக்களவை உறுப்பினர் இந்திய நாடாளுமன்றம்
for பாரபங்கி மக்களவைத் தொகுதி
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
முன்னையவர்பி. எல். புனியா
பின்னவர்உபேந்திர சிங் ராவத்
தொகுதிபாரபங்கி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 ஆகத்து 1985 (1985-08-07) (அகவை 38)[சான்று தேவை]
பரேலி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்Shri Raghunath
வாழிடம்(s)மாதாய்பூர், கோண்டா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
இணையத்தளம்http://priyankasinghrawat.co.in
As of 17 December, 2016
மூலம்: [1]

பிரியங்கா சிங் ராவத் (Priyanka Singh Rawat) பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ராவத், 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் உத்தரப் பிரதேசம், பரேலியில் உத்தம் ராம் சிங் மற்றும் பிரபா சிங் ஆகியோருக்குப் பிறந்தார். உத்தம் ராம் ஓய்வு பெற்ற மாநில குடிமைப் பணிகள் அதிகாரி ஆவார். ராவத் 2007 ஆம் ஆண்டில் மகாத்மா ஜோதிபா புலே ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டில் அதே பல்கலைக்கழகத்தில் மக்கள் தகவல் தொடர்பியல் மற்றும் மின்னணுவியல் இதழியல் பிரிவில் முதுகலை பட்டயச்சான்றினையும் பெற்றார். [1] [2] [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ராவத் தனது பல்கலைக்கழக நாட்களில் இளைஞர் அரசியலில் பங்கேற்றார். அந்த நேரத்தில் அவர் நூலக பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

ஜூன் 2013 இல், ராவத் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [3] 16 மார்ச் 2014 அன்று, பராபங்கி தொகுதியில் இருந்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ராவத் போட்டியிடுவார் என்று கட்சி அறிவித்தது. [5] இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனக்கு அடுத்த போட்டியாளரான பி.எல். புனியாவை தோராயமாக 211,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் பின்னர் மே மாதம் அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

2007 டிசம்பர் 5 ஆம் தேதி, ராவத் 2007 தொகுதியின் இந்திய ஆட்சிப்பணி (வருவாய் துறை) அதிகாரியாக இருக்கும் ரகுநாத் ராவத்தை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். [2] [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Rawat, Smt. Priyanka Singh". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 March 2019.
  2. 2.0 2.1 Kumar, Santosh (30 May 2014). "Barabanki MP Priyanka Singh Rawat of BJP". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  3. 3.0 3.1 Khan, Hamza (30 May 2014). "Giant Killers". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  4. 4.0 4.1 "32 newly elected under-35 MPs & what they intend to do for their constituencies". தி எகனாமிக் டைம்ஸ். 25 May 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  5. "Read list of BJP candidates for LS polls, Modi from Varanasi". India TV. 16 March 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_சிங்_ராவத்&oldid=3069737" இலிருந்து மீள்விக்கப்பட்டது