பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா

ஆள்கூறுகள்: 23°14′00″N 88°39′28″E / 23.2334324°N 88.6577104°E / 23.2334324; 88.6577104
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா
பிரிதிலதா மகிளா மகாவித்யாலயா
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்2007; 17 ஆண்டுகளுக்கு முன்னர் (2007)
சார்புகல்யாணி பல்கலைக்கழகம்
அமைவிடம்
பனிகாலி
,
தலுபாரி
, ,
741504
,
23°14′00″N 88°39′28″E / 23.2334324°N 88.6577104°E / 23.2334324; 88.6577104
வளாகம்கிராமப்புறம்
மொழிவங்காளம், ஆங்கிலம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா is located in மேற்கு வங்காளம்
பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா
Location in மேற்கு வங்காளம்
பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா is located in இந்தியா
பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா
பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா (இந்தியா)

பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா (முன்னதாக பிரிதிலதா மகிளா மகாவித்யாலயா) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள பனிகாலியில் 2007 ஆம் ஆண்டு நிறூவப்பட்ட ஒரு இருபாலரும் பயிலும் கல்லூரியாகும். தொடக்கத்தில் மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்ட இது, தற்போது இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்படுள்ளது. கலைப்பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி கல்யாணி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது[1] .

பெயர்க் காரணம்[தொகு]

சுதந்திர போராட்ட வீரரும், வங்காளத்தைச் சேர்ந்த பெண் புரட்சியாளருமான பிரிதிலதா வத்தேதாரை நினைவுகூரும் விதமாக இக்கல்லூரிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மகளிர் கல்லூரியாக இருந்தபோது பிரிதிலதா மகிளா மகாவித்யாலயா என்ற பெயரில் இயங்கிய இக்கல்லூரி, 2011 ஆம் ஆண்டில் இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரிதிலதா வத்தேதார் மகாவித்யாலயா என்ற பெயராக மாற்றப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

2007 ஆம் ஆண்டில் பனிகாலி மற்றும் அதன் அருகில் உள்ள சில கல்வியாளர்களின் முயற்சியால் கல்யாணி பல்கலைக்கழகத்தால் இணைக்கப்பட்ட அரசு உதவி பெறும் பெண் கல்விக்கான "பிரிதிலதா மகிளா மகாவித்யாலயாவை" நிறுவியுள்ளனர். [2]

அப்போதைய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஷேக் கபீர் உதீன் அகமது மற்றும் மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினரான தபேந்திரநாத் பிஸ்வாஸ் ஆகியோரின் நிதியுதவியுடன், இக்கல்லூரியின் கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் வகுப்புகள் மற்றும் நிர்வாகப் பணிகள் தற்போதைய கல்லூரி வளாகத்திற்கு மாற்றப்பட்டன.

துறைகள்[தொகு]

கலைப்பிரிவு[தொகு]

  • பெங்காலி (கவுரவப்பட்டம் & பொது)
  • ஆங்கிலம்
  • வரலாறு (கவுரவப்பட்டம் & பொது)
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of University of Kalyani". Archived from the original on 2012-03-01.
  2. "Pritilata Waddedar Mahavidyalaya, Nadia: Courses, Fees, Placements, Ranking, Admission 2021". பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.