பிரான்சிசு மேரி தெரசா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரான்சிசு மேரி தெரேசா பால் (Frances Mary Teresa Ball, 9 சனவரி 1794 - 19 மே 1861) ஒரு ஐரிய கத்தோலிக்க மத சகோதரி ஆவார். இவர் லோரெட்டோ சகோதரிகள் என்று அழைக்கப்படும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மேரி நிறுவனத்தின் ஐரியக் கிளையை நிறுவினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரான்சிசு பால் சனவரி 9, 1794 அன்று அயர்லாந்தின் டப்லினில் சான் மற்றும் மேபிள் கிளேர் பென்னட் பால் ஆகியோரின் ஆறு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தார். செல்வந்தரான இவருடைய தந்தை பட்டு நெசவாளராக இருந்தார். அந்த நேரத்தில் அயர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இவரது சகோதரர் நிக்கோலசு பின்னர் முதல் கத்தோலிக்க ஐரிய நீதிபதிகளில் ஒருவரானார். ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மேரி நிறுவனத்திற்குச் சொந்தமான பள்ளியில் படிக்க பிரான்சிசு தனது ஒன்பதாவது வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். [1] இருப்பினும் நிறுவனத்தின் சகோதரி மேரி வார்ட் இவரை அங்கீகரிக்கவில்லை. இந்த நிறுவனம் நீண்ட காலமாக சகோதரத்துவம், இளம் பெண்களுக்கு ஒரு நல்ல மத மற்றும் மதச்சார்பற்ற கல்விக்கான வழிமுறைகளை வழங்குவதற்காக பதினேழாம் நூற்றாண்டில் மேரி வார்ட் என்பவரால் முதலில் நிறுவப்பட்டது.[2] அந்தக் காலங்களில் மாணவர்கள் உயிர்ப்பு ஞாயிறு, நத்தார் அல்லது கோடை விடுமுறைக்கு வீடு திரும்புவதில்லை. அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும் வரை, பொதுவாக தங்கள் பதின்ம வயதின் பிற்பகுதியில்.பள்ளியிலேயே தங்கி, மதவாதிகளைப் போல வாழ்ந்தனர்.

1807 ஆம் ஆண்டில், இவரது மூத்த சகோதரி, சிசிலியா கார்க்கில் உள்ள உர்சுலின் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். பிரான்சிசு டப்லினில் இருந்து கார்க் வரை ஒவ்வொறு விழாவிற்கும் சென்று வந்தார். அங்கு இவர் மேரி ஐகென்ஹெட்டைச் சந்தித்தார்.[2] 1808 இல் தனது தந்தை இறந்த பிறகு, பிரான்சிசு டப்லினுக்குத் திரும்பினார்.[1]

சூன் 1814 இல், டப்ளின் பேராயர் டாக்டர். டேனியல் முர்ரேவின் வழிகாட்டுதலின் கீழ், பிரான்சிசு யார்க் திரும்பினார். பின்னர், ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மேரியின் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் தனது மதப் பயிற்சியைப் பெற்றார். மேலும் செப்டம்பர் 1816 இல் தனது தொழிலை மேற்கொண்டார். மதத்தில், மேரி தெரசா என்ற பெயரைப் பெற்றார்.

லொரேட்டோ சகோதரிகள்[தொகு]

ராத்ஃபர்ன்ஹாமில் உள்ள லோரெட்டோ அபேயிலுள்ள லொரேட்டோ சகோதரிகள் இல்லம்

அன்னை பிரான்சிசு மிகுந்த பக்தியும் நிர்வாகத் திறனும் கொண்ட பெண்ணாக இருந்தார். இவர் பள்ளிகளை நிறுவுவவும், இப்போது பல நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்ட சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.[1] லொரேட்டோ சகோதரிகள் இல்லத்தின் முதல் கிளை 1833 ஆம் ஆண்டில் கவுண்டி மீத், நவன் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டு அயர்லாந்தில் ராத்ஃபர்ன்ஹாமில் உள்ள லோரெட்டோ அபேயில் முதல் தேவாலயம் கட்டப்பட்டது. உண்டு உறைவிட பள்ளிகளுக்கு கூடுதலாக, சகோதரிகள் அனாதை இல்லங்களை நடத்துகின்றனர்.[3] இவரது சகோதரி அன்னா மரியா, இவரது பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவினார். செயின்ட் ஸ்டீபன்ஸ் கிரீனில் உள்ள லொரேட்டோ பள்ளியை வாங்குவதற்கான நிதியையையும் திரட்டித் தந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Drury, Edwin. "Mother Frances Mary Teresa Ball." The Catholic Encyclopedia. Vol. 2. New York: Robert Appleton Company, 1907. 9 Oct. 2014
  2. 2.0 2.1 Coleridge S.J., Henry James.The life of mother Frances Mary Teresa Ball, Burns & Oates, London, 1881
  3. Gertrude, Sister Mary. "Irish Institute of the Blessed Virgin Mary." The Catholic Encyclopedia. Vol. 8. New York: Robert Appleton Company, 1910. 10 Oct. 2014
  4. . 2009. 

வெளி இணைப்புகள்[தொகு]