பிராங்க் கேப்ரியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்க் கேப்ரியோ
2018 இல் பிராங்க் கேப்ரியோ
ரோடு தீவு, பிராவிடென்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
1985 – சனவரி 2023
பின்னவர்சான் லோம்பார்டி[1]
வார்டு 13 பிராவிடன்சு நகர மன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1968
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரான்செசுகோ கேப்ரியோ

நவம்பர் 24, 1936 (1936-11-24) (அகவை 87)
பெடரல் கில், பிராவிடன்சு, ரோடு தீவு, ஐ.அ
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி[2]
துணைவர்சாய்சு இ. கேப்ரியோ
பிள்ளைகள்5
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்க இராணுவம்
சேவை ஆண்டுகள்1954–1962
அலகுரோட் தீவு இராணுவ தேசிய காவலர்

பிரான்செசுகோ கேப்ரியோ (Francesco Caprio, பிறப்பு நவம்பர் 24, 1936) என்பவர் ஒரு அமெரிக்க நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார், இவர் ரோடு தீவு, பிராவிடென்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உயர் கல்விக்கான ரோடு தீவு ஆளுநர் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். காட் இன் பிராவிடன்சு என்ற நிகழ்ச்சியில் இவரது நீதித்துறைப் பணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. [3][4] பார்க்கிங் வார்சு என்ற அமெரிக்க போக்குவரத்து விதிமீறல் தொடர்பான உண்மைநிலை நிகழ்ச்சி தொடரிலும் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டில், இவரது நீதிமன்ற தீர்ப்பு காணொளிகள் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தன, இதில் 15 மில்லியனுக்கு மேலான பார்வைகளை பெற்றார். [5][6] 2022 ஆம் ஆண்டில், காட் இன் பிராவிடன்சு நிகழ்ச்சியின் பார்வைகள் 500 மில்லியனை நெருங்கியது. [7]

தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ரோடு தீவில் உள்ள பெடரல் கில் பகுதியில் அன்டோனியோ காப்ரியோவுக்கு பிறந்த மூன்று மகன்களில் இரண்டாவது மகனாக பிறந்தார்.[8] இவரது தந்தை அன்டோனியோ காப்ரியோ இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர், பால் பழ வியாபாரம் செய்து வந்தார்.[8][9]

இவர் பிராவிடன்சு பொதுப் பள்ளிகளில் தொடக்கக்கல்வியை கற்றார், கல்வி கற்கும் போது பாத்திரம் கழுவுவது, காலணிகளை சுத்தப்படுத்துவது ஆகிய பணிகளை ஒரு பகுதியாக செய்தார். ரோடு தீவிலுள்ள பிராவிடன்சு மத்திய உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார், உயர்நிலைப் பள்ளியில் 1953 ஆம் ஆண்டு மல்யுத்தத்தில் மாநில பட்டத்தை வென்றார்.[10] பிராவிடன்சு கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [11] பட்டம் பெற்ற பிறகு, பிராவிடன்சில் உள்ள ஒப் உயர்நிலைப் பள்ளியில் கல்வியை கற்பிக்கும் ஆசிரியராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். ஒப் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்பிக்கும் போது, பாசுடனிலுள்ள சப்போல்க் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரவுப் பள்ளியில் சட்டக் கல்விப் பயின்றார். இது இவரை சட்டத்துறையில் பணி செய்ய வழி வகுத்தது.[12] 1954 முதல் 1962 வரை 876 வது போர் பொறியாளர் படையணியில் தேசிய காவலில் பணியாற்றினார். அக்காலத்தில், நரகன்செட்டில் உள்ள கேம்ப் வர்னும், பென்சில்வேனியாவில் உள்ள போர்ட் இண்டியன்டவுன் கேப் ஆகிய இடங்களில் இருந்தார். [8][10][13][14]

தொழில்[தொகு]

1962 முதல் 1968 வரை பிராவிடன்சு நகர மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1970 இல் ரோட் தீவு சட்டத்துறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டார், குடியரசுக் கட்சியின் இரிச்சர்ட் ஜே. இசுரேலிடம் தேர்தலில் தோல்வியடைந்தார்.[15] 1975 இல் ரோட் தீவு அரசியலமைப்பு மாநாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஐந்து சனநாயக தேசிய மாநாடுகளுக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோட் தீவு பல்கலைக்கழகம், ரோட் தீவு கல்லூரி, ரோட் தீவு சமூகக் கல்லூரி ஆகியவற்றிற்கான முக்கிய முடிவுகளைக் மேற்கொள்ளும் உயர் கல்விக்கான ரோட் தீவு ஆளுநர் வாரியத்திற்கு தலைமை தாங்கினார்.[8] 1985 முதல், பிராவிடன்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார்.[4] இவர் ரோட் தீவு, நாரகன்செட்டில் உள்ள கடலோர காவல்படை உணவகத்தில் பங்குதாரராகவும் உள்ளார்.[16]

கேப்ரியோ சனவரி 2023 இல் ஓய்வு பெற்றார்.[17]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கேப்ரியோ சாய்சு இ. கேப்ரியோவை மணந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. [8] இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்: பிராங்க் டி. கேப்ரியோ, டேவிட் கேப்ரியோ, மரிசா கேப்ரியோ பெசுசே, சான் கேப்ரியோ மற்றும் பால் கேப்ரியோ. [8] பிராங்க் கேப்ரியோ பாசுடன் ரெட் சாக்சு என்ற பாசுடனில் உள்ள அமெரிக்க தொழில்முறை அடிபந்தாட்ட அணியின் ரசிகர். [18]

அண்மையில் தனது 87வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு, திசம்பர் 6, 2023 அன்று, முகநூல் மற்றும் யூடியூப்பில் வெளியிட்ட காணொளியில், தனக்கு கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்தார். இவருக்கு ஆதரவளிக்க விரும்புபவர்கள், இவரை தங்களின் பிரார்த்தனைகளில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார், இவரை நன்றாக கவனித்துக்கொண்ட மருத்துவர்களைப் பாராட்டினார். [19] [20]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History made as Providence City Council elects municipal court judges". WPRI.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-01-20. Archived from the original on 2023-12-20. பார்க்கப்பட்ட நாள் 2023-12-20.
  2. "H 9114". State of Rhode Island in General Assembly. Archived from the original on 2019-08-25. பார்க்கப்பட்ட நாள் 2021-04-09.
  3. "People having tough days". Caught in Providence You Tube Channel. Caught in Providence. Archived from the original on 6 August 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2018.
  4. 4.0 4.1 "Caught in Providence". Official website. Archived from the original on 9 August 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  5. "80-year-old judge becomes unlikely internet star". CBS News. 23 August 2017 இம் மூலத்தில் இருந்து 11 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190511224727/https://www.cbsnews.com/news/frank-caprio-80-year-old-judge-becomes-internet-star-providence/. 
  6. "Viral Judge Frank Caprio Rules With A Big Heart". NBC News. 7 November 2017 இம் மூலத்தில் இருந்து 27 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190727135032/https://www.youtube.com/watch?v=Y2jwXB6lriw&gl=US&hl=en&has_verified=1&bpctr=9999999999. 
  7. "Caught in Providence - YouTube". YouTube. Archived from the original on 2019-08-10. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 "Judge Frank Caprio Wants Justice for All". 20 February 2019. Archived from the original on 6 August 2019. பார்க்கப்பட்ட நாள் 19 May 2019."Judge Frank Caprio Wants Justice for All".
  9. "Caprio: Leave the ladder down, so others may follow". independentri.com. May 19, 2016. Archived from the original on August 6, 2019. பார்க்கப்பட்ட நாள் May 19, 2019.
  10. 10.0 10.1 "Providence is home court for TV Judge Frank Caprio '58 & '08Hon". news.providence.edu. May 8, 2019. Archived from the original on August 6, 2019. பார்க்கப்பட்ட நாள் May 19, 2019.
  11. வார்ப்புரு:USCongRec
  12. "The civics lesson and the last chance for a pan handler: Judge Caprio trying a school teacher". You tube (Caught in Providence Channel). You Tube / Caught in Providence. Archived from the original on 17 December 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
  13. "A Family of Veterans, Hurricane High Gravity, and Help Yourself" பரணிடப்பட்டது 2021-01-29 at the வந்தவழி இயந்திரம்.
  14. Bolinger, James.
  15. "Archived copy". Archived from the original on 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-08-04.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  16. வார்ப்புரு:USCongRec
  17. Gavigan, Parker (13 January 2023). "Providence City Council Statement". Providence City Council. Archived from the original on 9 March 2023. பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  18. "Judge Caprio to throw out first pitch at Yankees-Red Sox game on Thursday". providencejournal.com. July 23, 2019. Archived from the original on November 16, 2020. பார்க்கப்பட்ட நாள் May 31, 2020.
  19. "Judge Caprio announces he has pancreatic cancer". bostonglobe.com. December 6, 2023. Archived from the original on December 6, 2023. பார்க்கப்பட்ட நாள் December 6, 2023.
  20. "Judge Caprio announces he has pancreatic cancer in a YouTube video". Judge Caprio YouTube channel. December 6, 2023. Archived from the original on December 28, 2023. பார்க்கப்பட்ட நாள் December 28, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_கேப்ரியோ&oldid=3936733" இலிருந்து மீள்விக்கப்பட்டது