பிரதீப் குருல்கர் உளவு வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதீப் குருல்கர் உளவு வழக்கு
நாள்3 மே 2023
அமைவிடம்புனே, மகாராட்டிரம், இந்தியா
வகைஉளவு
பங்கேற்றோர்பிரதீப் குருல்கர் (அறிவியலாளர்)[1] - பாகிஸ்தான் உளவுப் பெண்
விளைவுவிசாரணையில்

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூத்த விஞ்ஞானியான பிரதீப் குருல்கர், ஏவுகணை தொழில்நுட்ப இரகசியங்களை பாகிஸ்தான் நாட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தமை காரணமாக குற்றம்சாட்டப்பட்டு[2], 3 மே 2023 அன்று மகாராட்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.[3][4]

பிரதீப் குருல்கர் புனே நகரத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஒரு பிரிவிற்கு இயக்குநராக உள்ளார்.

பிரதீப் குருல்கர் மேல் உள்ள உளவு வழக்கு, இந்திய இராணுவப் பாதுகாப்பு இரகசியங்களுக்கும் மற்றும் பெருமளவு அழிவு ஆயுத உற்பத்திகளின் இரகசியங்களுக்கும் சவால் உள்ளது.[5]

பின்னணி[தொகு]

பிப்ரவரி 2023ல் ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் இராக்கெட் பிரிவின் மூத்த விஞ்ஞானி, இந்திய இராணுவத்தின் இராக்கெட் தொழில்நுட்ப இரகசியங்களை எதிரி நாடான பாகிஸ்தான் நாட்டுப் பெண்னிடம் பகிர்ந்து கொண்டமைக்காக ஒடிசா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[6]

கால வரிசை[தொகு]

பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவுப் பெண்ணிடம் இராக்கெட் தொழில்நுட்ப இரகசியங்களை அலைபேசி வாட்சப் மற்றும் காணொளி மூலம் பகிர்ந்து கொண்டதை அடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புத் துறையினர் பிரதீப் குருல்கர் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.[3] அதன் பேரில் 3 மே 2023 அன்று மகாராட்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் பிரதீப் குருல்கரை அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.[7] பாகிஸ்தானிய நாட்டவர் பொறி வைத்து, தனது அலைபேசியை ஒட்டுக் கேட்டு தன்னை சதிவலையில் சிக்க வைக்கப்பட்டதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரதீப் குருல்கர் மறுத்தார்.[3][8] 4 மே 2023 அன்று பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், பிரதீப் குருல்கரை புனே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் பிரதீப் குருல்கரை 9 மே 2023 வரை காவல்துறையின் காவலில் ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி.ஆர்.டி.ஓ மையத்தில் உளவு சர்ச்சை: டாப் விஞ்ஞானி, இசைக் கலைஞர், டாஸ்க் மாஸ்டர், பேச்சாளர் பாஸ்
  2. பிரம்மோஸ் அறிக்கை பாகிஸ்தானுக்கு காட்ட முயன்ற விஞ்ஞானி: யார் இந்த பிரதீப் குருல்கர்?
  3. 3.0 3.1 3.2 "DRDO scientist arrested for passing sensitive information to Pakistani agent sent to 14-day judicial custody" (in en-IN). The Hindu. 16 May 2023. https://www.thehindu.com/news/national/other-states/drdo-scientist-arrested-for-passing-sensitive-information-to-pakistani-agent-sent-to-14-day-judicial-custody/article66858183.ece. 
  4. Chitnis, Purva (19 May 2023). "Was arrested DRDO scientist honey-trapped? 'Explicit photos, chats' hint at Pakistani spy connection". ThePrint. https://theprint.in/india/was-arrested-drdo-scientist-honey-trapped-explicit-photos-chats-hint-at-pakistani-spy-connection/1580367/. 
  5. "How top DRDO scientist's arrest in honeytrapping case raises questions" (in en). The Week. 21 May 2023. https://www.theweek.in/theweek/current/2023/05/20/drdo-scientist-pradeep-kurulkar-arrest-raises-questions.html. 
  6. "Defence Research Official Arrested For Sharing Info With Pakistani Spy". NDTV.com. 24 February 2023. https://www.ndtv.com/india-news/defence-research-official-arrested-for-sharing-info-with-pakistani-spy-3811550. 
  7. DRDO scientist Pradeep Kurulkar was attracted to Pakistani agent 'Zara', talked about Indian missile systems: Chargesheet
  8. DRDO scientist honeytrap: What the charge-sheet reveals
  9. "DRDO scientist held for 'Pak link' headed key research lab, ATS probing 'foreign visits' in espionage case" (in en). The Indian Express. 5 May 2023. https://indianexpress.com/article/cities/pune/drdo-scientist-pakistan-link-ats-espionage-8592702/.