பிரசியோடைமியம்((III)) நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்((III)) நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அசனைலிடைன்பிரசியோடைமியம், பிரசியோடைமியம்(III) நைட்ரைடு
இனங்காட்டிகள்
25764-09-4 Y
ChemSpider 105114
EC number 247-244-6
InChI
  • InChI=1S/N.Pr
    Key: JCWZBEIBQMTAIH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 117626
SMILES
  • N#[Pr]
பண்புகள்
NPr
வாய்ப்பாட்டு எடை 154.91 g·mol−1
தோற்றம் கருப்பு நிற படிகங்கள்
அடர்த்தி 7.46 கி/செ.மீ3
நீருடன் வினைபுரியும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[1]
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிரசியோடைமியம்((III)) நைட்ரைடு (Praseodymium(III) nitride) PrN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] இந்த உப்பு பிரசியோடைமியமும் நைட்ரசனும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது.[3] கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையும்.

தயாரிப்பு[தொகு]

பிரசியோடைமியத்தையும் நைட்ரசனையும் சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம்((III)) நைட்ரைடு உருவாகிறது :

பிரசியோடைமியத்துடன் அம்மோனியாவைச் சேர்த்து சூடுபடுத்தினாலும் பிரசியோடைமியம்((III)) நைட்ரைடு உருவாகிறது :

பண்புகள்[தொகு]

பிரசியோடைமியம்((III)) நைட்ரைடு கனசதுர அமைப்பில் இடக்குழு Fm3m,[4] a = 0.5165 நானோமீட்டர், Z = 4, செல் அளவுருக்களுடன் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது. இதன் அமைப்பு சோடியம் குளோரைடு உப்பின் கட்டமைப்பை போன்றதாகும்.

இச்சேர்மம் தண்ணீருடன் உடனடியாக நீராற்பகுக்கப்டுகிறது. அமிலங்களுடன் வினைபுரிகிறது.

பயன்கள்[தொகு]

பிரசியோடைமியம்((III)) நைட்ரைடு உயர்நிலை மின்சாரம் மற்றும் குறைக்கடத்தி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பாசுபரை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஒரு காந்தப் பொருளாகவும், திட அடுக்குகளின் இலக்குப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Praseodymium nitride - Substance Information - ECHA". European Chemical Agency. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021.
  2. Fuwa, Akio (1974). The Thermodynamics of Nitride Formation Reactions in Molten Tin-based Alloys (in ஆங்கிலம்). Department of Applied Earth Sciences, Stanford University. p. 120. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021.
  3. "Praseodymium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021.
  4. None Available (2020). Materials Data on PrN by Materials Project. Materials Project. doi:10.17188/1206763. https://materialsproject.org/materials/mp-343/. பார்த்த நாள்: 18 June 2021. 
  5. "Praseodymium Nitride (PrN) Powder" (in ஆங்கிலம்). Stanford Advanced Materials. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021.