பிரசாந்த் நீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசாந்த் நீல்
2022இல் பிரசாந்த் நீல்
பிறப்பு4 சூன் 1980 (1980-06-04) (அகவை 43)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • உக்ரம்
  • கே.ஜி.எஃப் படத் தொடர்
வாழ்க்கைத்
துணை
இலிக்தா ரெட்டி (தி. 2010)
பிள்ளைகள்2

பிரசாந்த் நீல் (Prashanth Neel) (பிறப்பு 4 ஜூன் 1980) பிரசாந்த் நீலகண்டபுரம் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் மற்றும் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பணிபுரியும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான உக்ரம் மூலம் அறிமுகமானார். பின்னர் இரண்டு பாகங்கள் கொண்ட கே.ஜி.எஃப் அத்தியாயம் ஒன்று (2022) என்ற திரைப்படங்களை இயக்கினார்: இது அதிக வசூல் செய்த கன்னடத் திரைப்படப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர் சாலார்: பகுதி 1 – சீஸ்ஃபையர் (2023), என்ற தெலுங்கு படத்தை இயக்கினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

பிரசாந்த் நீலகண்டபுரம் [1]4 ஜூன் 1980 [2] அன்று கர்நாடக மாநிலத்தில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் சுபாஷ் மற்றும் பாரதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த பிறந்தார். இவர்களின் குடும்பம் ஆந்திராவின் மடகாசிராவுக்கு அருகிலுள்ள நீலகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் பெங்களூரில் குடியேறினர்[3][4] நீல் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாக பேசுகிறார்.

நீல் 2010 இல் இலிகிதா என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.[5] நீலின் சகோதரி கன்னட நடிகர் ஸ்ரீமுரளியை மணந்தார். முரளி நீலின் அறிமுக இயக்குமான உக்ரம் படத்தில் நடித்தார்.[6] நீல் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா மற்றும் ஆந்திராவின் முன்னாள் மாநில அமைச்சர் இரகு வீரா ரெட்டி ஆகியோரின் உறவினர் ஆவார்.[7][8]

தொழில் வாழ்க்கை[தொகு]

திரைப்பட இயக்கத்தில் படிப்பை தொடர்ந்து தான் எழுதிய ஆ ஹுதுகி நீனே என்ற திரைக்கதையில் தனது மைத்துனரும் நடிகருமான ஸ்ரீமுரளியைக் கொண்டு இயக்க முடிவு செய்தார். முரளியின் ஆர்வமின்மைக் காரணமாக உக்ரம் என்ற அதிரடித் திரைப்படத்தின் திட்டத்துடன் வந்தார்.[9] இந்த படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. மேலும், 2014 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த கன்னடப் படங்களில் ஒன்றானது.[10]

பின்னர் 2018இல் வெளியான ஒரு கன்னட மொழி வரலாற்று நாடகம் மற்றும் அதிரடித் திரைப்படமான கே.ஜி.எஃப் அத்தியாயம் ஒன்று [11][12].[13] படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார்.

பின்னர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் சாலார்: பகுதி 1 – சீஸ்ஃபையர் (2023), என்ற தெலுங்குப் படம் வெளியானது.[14][15][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "నీల్ అంటే నీలకంఠాపురం – ప్రశాంత్ నీల్ మనోడే ! ఇవిగో డీటైల్స్". ABP Desam (in தெலுங்கு). 21 April 2022. Archived from the original on 25 April 2022. பார்க்கப்பட்ட நாள் 25 April 2022.
  2. "Prabhas and Jr NTR wish 'KGF' director Prashanth Neel for birthday". தி நியூஸ் மினிட். 4 June 2021. Archived from the original on 23 May 2022. பார்க்கப்பட்ட நாள் 20 April 2022. Prashanth Neel [..] is celebrating his 41st birthday on Friday, June 4.
  3. "KGF : ప్రశాంత్ నీల్ మన తెలుగువాడే.. ఈ రాజకీయ నాయకుడికి బంధువే.. మీకు తెలుసా?? | Facts about Prashanth Neel". 10TV (in Telugu). 23 April 2022. Archived from the original on 23 April 2022. பார்க்கப்பட்ட நாள் 25 April 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Kumar, Thummala (23 April 2022). "KGF డైరెక్టర్ మన సీమబిడ్డే.. రఘువీరారెడ్డి బంధువు.. ఆసక్తికర విషయాలు". Samayam Telugu (in தெலுங்கு). Archived from the original on 25 April 2022.
  5. "In Pictures: Prashanth Neel shares a heart-warming post to wish daughter a happy birthday". The Times of India. 27 January 2021. Archived from the original on 14 February 2022.
  6. "ಪ್ರಶಾಂತ್ ನೀಲ್, ಶ್ರೀಮುರಳಿಗೆ ಸಿನಿಮಾ ನಿರ್ದೇಶಕ ಮಾತ್ರವಲ್ಲ; ಇಲ್ಲಿವೆ ಬಾವ-ಬಾಮೈದರ ಅಪರೂಪದ ಫೋಟೋಗಳು". News18 Kannada (in கன்னடம்). 17 December 2020. Archived from the original on 1 June 2022.
  7. "Exclusive Interview : Aadarsh Balakrishna- I have taken my career very seriously now". 123telugu.com. 15 May 2020. Archived from the original on 30 November 2020.
  8. Kumar, Thummala (23 April 2022). "KGF డైరెక్టర్ మన సీమబిడ్డే.. రఘువీరారెడ్డి బంధువు.. ఆసక్తికర విషయాలు". Samayam Telugu (in தெலுங்கு). Archived from the original on 25 April 2022.
  9. Setlur, Mukund. ""ಸಿನೆಮಾ ಉದ್ದೇಶ ಕತೆ ಹೇಳುವುದಲ್ಲ"- ಪ್ರಶಾಂತ್ ನೀಲ್" [Aim of the Film is Not Narration of the Story] (in Kannada). Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 April 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "The Top 5 Kannada films of 2014 so far". Rediff. Archived from the original on 15 June 2021. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  11. "The story of KGF is fresh and special for Indian cinema: Yash". தி நியூ இந்தியன் எக்சுபிரசு.
  12. "Kannada star Yash optimistic about upcoming action-period drama 'KGF'". Devdiscourse. 11 September 2018. Archived from the original on 3 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  13. Express, Financial (7 July 2021). "Raveena Tandon reveals delay to KGF: Chapter 2 release, new date to be announced soon". Archived from the original on 26 July 2021. பார்க்கப்பட்ட நாள் 26 July 2021.
  14. "CONFIRMED: Prabhas' Salaar To Release on December 22; to clash with Shah Rukh Khan's Dunki". Bollywood Hungama. 25 September 2023. Archived from the original on 25 September 2023. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
  15. "Salaar: Prabhas, Prashanth Neel's film release date announced with new poster". DNA. 15 August 2022. Archived from the original on 15 August 2022. பார்க்கப்பட்ட நாள் 15 August 2022.
  16. Bureau (9 March 2022). "Prabhas Reveals Prithviraj Sukumaran Will Be The Part Of 'Salaar'". Outlook. Archived from the original on 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022. 'Salaar' will be shot in both Telugu and Kannada languages and will be dubbed into Hindi, Tamil, and Malayalam languages.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசாந்த்_நீல்&oldid=3933577" இலிருந்து மீள்விக்கப்பட்டது