பின்புல இருள் நுண்ணோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்புல இருள் நுண்ணோக்கி மூலம் பார்க்கப்படும் இரத்தச் சிவப்பணுக்கள் x 1000

பின்புல இருள் நுண்ணோக்கி (Dark-field microscopy) என்ற நுண்ணோக்கியின் உதவியால் பாக்டீரியாக்களை தெளிவுறப் பார்க்க இயலும். இதில் உள்ள சிறப்பான குவிப்பான் பொருளின் வழியாக வரும் ஒளிக்கதிர்களில் சிதறும் ஒளிக்கதிர்களை மட்டும் பொருளருகு வில்லைக்கு அனுப்பி பிம்பத்தை உருவாக்குகிறது. இதன் விளைவாக உருவாகும் பிம்பங்கள் இருள் புலத்தில் பளிச்சென்று தெரியும். பிம்பம் தெளிவுத்தன்மை அதிகம் கொண்டது. சூரியஒளிக்கற்றையில் தூசுகள் மிதப்பது போன்ற விளைவு தோன்றும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. பள்ளிக்கல்வித்துறை. இயற்பியல். தமிழ்நாட்டுப்பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகம். பக். 63.