பிங்கல நிகண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிங்கலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.[1] இது சோழர்கள் ஆண்ட கிபி 10 ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சைவ சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது. மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.[2]

நூல் அமைதி[தொகு]

நிகண்டு நூல்களில் பழமையதான திவாகர நிகண்டு சொற்களை இக்கால அகராதி போல அகர வரிசையில் அடுக்கிக்கொண்டு பொருள் கூறுகிறது. இந்த நிகண்டு ஒன்றுவிட்ட அடுத்த எழுத்தான எதுகை அடிப்படையில் சொற்களை அடுக்கிக்கொண்டு சொல்லின் பொருளை விளக்குகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு, செந்தமிழ்ப் பிரசுரம் – வெளியீடு – எண் 54, சு. வையாபுரிப்பிள்ளை பதிப்பு, அச்சகம் – மதுரைத் தமிழ்ச் சங்கம் முத்திராசாலை அச்சகம், 1931
  2. சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001
"http://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கல_நிகண்டு&oldid=1764824" இருந்து மீள்விக்கப்பட்டது