தமிழ் அகராதிகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகராதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும். துறைசார் அகராதிகள் குறித்த துறை தொடர்பான சொற்களைப் பட்டியற் படுத்து. பொதுவாக அகராதிகள் நூல் வடிவங்களாகவே இருந்து வந்துள்ள போதிலும் இப்பொழுது இணையத் தளங்களிலும் மெய்நிகர் அகராதிகள் தொகுக்கப்படுகின்றன.
தமிழ் [தொகு]
- 1594 - அகராதி நிகண்டு - இரேவணசித்தர்
- 1732 - சதுரகராதி - வீரமாமுனிவர்
- 1842 - மானிப்பாய் அகராதி
- 1899 - தமிழ் பேரகராதி - நா. கதிரவேற்பிள்ளை
- 1909 - 20ம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி
- 1910 - தமிழ்ச் சொல் அகராதி - கு. கதிரவேற்பிள்ளை
- 1918 - தமிழ் மொழி அகராதி - நமசிவாய முதலியார்
- 1921 - மாணவர் தமிழ் அகராதி - அனவரதவிநாயகம்
- 1922 - இராவுத்தர் (பார்மாவில் இருந்து)
- 1923 - நாகுமீரா (பார்மாவில் இருந்து)
- 1925 - பாவனந்தம் பிள்ளையின் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி
- 1926 - சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி
- 1928 - இளைஞர் தமிழ்க் கையகராதி - மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை
- 1934 - விக்டோரியா தமிழ் அகராதி
- 1935 - ஆனந்த விடகன் அகராதி
- 1935 - சூபிலி தமிழ் அகராதி
- 1935 - நவீன தமிழ் அகராதி - கிருட்ணசாமிபிள்ளை
- 1939 - தமிழமிழ்த அகராதி - கிருட்ணசாமிப்பிள்ளை
- 1964 - கழகத் தமிழகராதி
- 1966 - லிப்கோ தமிழ் அகராதி
- 1979 - மணிமேகலைத் தமிழகராதி
- இணைச்சொல் அகராதி
- விக்சனரி
வட்டார வழக்குகள் [தொகு]
- மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி
- கரிசல் வட்டார வழக்கு அகராதி - கி. ராஜநாராயணன்
- கொங்கு வட்டார வழக்கு அகராதி - பெருமாள்முருகன்
- கடலூர் வட்டார வழக்கு அகராதி - கண்மணி குணசேகரன்
- நாஞ்சில்நாட்டு வட்டார வழக்கு அகராதி - அ. கா. பெருமாள்
- தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதி - சுபாஷ் சந்திரபோஸ்
- செட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி - பழனியப்பா சுப்ரமணியன்
மலையாளம் [தொகு]
தெலுங்கு [தொகு]
- 1925 - தெலுங்கு - தமிழ் அகராதி (1925) - கிருட்டிணசாமி ஐயர்
- 1939 - தமிழ் - தெலுங்கு அகராதி (1939) - கேசாசார்லு
கன்னடம் [தொகு]
இந்தி [தொகு]
- 1878 - இந்தி - தமிழ் அகராதி (1878) - அந்தோனிப்பிள்ளை
- 1925 - இந்தி தமிழ் கோசம் - அரிகரசர்மா
- 1926 - தமிழ் இந்தி கோசம் - அரிகரசர்மா
- 1957 - இந்தி - தமிழ் அகராதி (1957) - கா. அப்பாதுரை
மராத்தி [தொகு]
- 1961 - மராத்தி - தமிழ் அகராதி - இரமாபாய் சோசி
சமசுகிருதம் [தொகு]
- 1857 - வடமொழி திரவிய நிகண்டு
- 1878 - பதார்த்த பாசுகரம்
- 1928 - சீனிவாச ஆச்சாரியார் வடமொழி தமிழ் அகராதி (1928)
- 1930 - வேங்கடேச சர்மா வடமொழி தமிழ் அகராதி (1930)
- 1952 - வடமொழிச் சொற்கடல்
- 1962 - பாபநாசசிவம் வடமொழி தமிழ் அகராதி (1962)
- வடசொல் தமிழ் அகராதி - கோவேந்தன்
சிங்களம் [தொகு]
- 1964 - சிங்கள தமிழ் அகராதி (1964)
- 1972 - தமிழ் சிங்கள அகராதி (1972)
- 2003 - இலகு சிங்கள தமிழ் அகராதி
மலாய் [தொகு]
சீனம் [தொகு]
பர்மா [தொகு]
அரபு [தொகு]
- 1902 - அரபுத் தமிழ் அகராதி - குலாம் காதிறு நாவலர்
- 1905 - அரபுத் தமிழ் அகராதி - முகம்மது அப்துல்லா
- 1965 - அரபுத் தமிழ் அகராதி - யாசீன் மௌலானா
- 1983 - தமிழிலக்கிய அரபுச்சொல் அகராதி
உர்து [தொகு]
- தமிழ் உர்து அகராதி - முக்தார் பத்ரி
- உர்து தமிழ் அகராதி - முக்தார் பத்ரி
உருசியம் [தொகு]
- 1960 - தமிழ் உருசிய அகராதி
- 1987 - உருசிய தமிழ் ஆரம்ப அகராதி
ஆங்கிலம் [தொகு]
- 1779 - தமிழ் ஆங்கில அகராதி - சாம் பிலிப் பெப்ரீசியசு, சான் கிறித்தி யான் பெரெய்தாப்டு
- 1841 - பைபிள் இறையியல் அகராதி - என்றி பவர்
- 1862 - வின்சுலோ தமிழ் - ஆங்கில அகராதி
போர்த்துக்கீசு [தொகு]
- 1750 கள் - தமிழ் போர்த்துக்கீசு - வீரமாமுனிவர்
பிரெஞ்சு [தொகு]
- 1750 - பிரெஞ்சு - தமிழ் அகராதி (பாரிசில் சுவடி வடிவில் உள்ளது) ? வீரமாமுனிவர்
- 1831 - பிரெஞ்சு தமிழ் அகராதி
- 1845 - பிரெஞ்சு - தமிழ் (பொசுகியினது)
- 1846 - பிரெஞ்சு தமிழ் அகராதி
- 1850 - டூபூய் மூசே பிரெஞ்சு தமிழ் அகராதி
- தற்காலத் அகராதி பிரெஞ்சு - தமிழ் - ச.சச்சினாந்தன்
யேர்மன் [தொகு]
- 1869 - தமிழ் - ஆங்கிலம் - செர்மன் அகராதி
- 1992 - யேர்மன் தமிழ் தமிழ் யேர்மன் அகராதி
- செருமன் - தமிழ் அகராதி - சு. இராசாராம்
டச்சு [தொகு]
நோர்வேசியன் [தொகு]
பின்னிசு [தொகு]
இத்தாலியன் [தொகு]
டேனிசு [தொகு]
சுவீடிசு [தொகு]
இலத்தீன் [தொகு]
- 1742 - தமிழ் - இலத்தீன் அகராதி (1742) - வீரமாமுனிவர்
- 1867 - தமிழ் - இலத்தீன் அகராதி (1867) - ஆர். பி. குரி
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- தமிழ் அகராதிகளின் பட்டியல்கள்
- மருத்துவ அகராதி தந்த மேதை ஒரு துன்பியல் நாடகம்
- தமிழும் அகராதியும்
- அகராதிகள்: செம்பதிப்பும் நம்பதிப்பும்