பா. ராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Paraghavan A.jpg

பா. ராகவன். (பிறப்பு: அக்டோபர் 8, 1971; சென்னை) தமிழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் பட்டயப்படிப்பு (Diploma in Mechanical Engineering) முடித்தவர். அமுதசுரபி, தாய் போன்ற இதழ்களில் சில காலம் பணியாற்றிவிட்டு, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கல்கியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். திரைப்பட விமர்சகராக நுழைந்து, 2000ம் ஆண்டு வரை கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து 'ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்த இவர், தற்போது நியூ ஒரைசன் மீடியா நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இவர், இப்போது திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

[தொகு] படைப்புகள்

[தொகு] அரசியல் வரலாறுகள்

  • மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு
  • பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு
  • டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு)
  • 9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004)
  • நிலமெல்லாம் ரத்தம் (2005)
  • அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி (2005)
  • ஹிஸ்புல்லா : பயங்கரத்தின் முகவரி (2006)
  • இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006)
  • ஹிட்லர் (2006)
  • அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் (ஸ்பெயினின் ETA போராளிகளைப்பற்றியது)

[தொகு] தனிக் கட்டுரை நூல்கள்

  • ஜெயித்த கதை
  • 154 கிலோபைட்
  • 24 கேரட்
  • ஓப்பன் டிக்கெட்
  • எக்சலண்ட்!

[தொகு] புதினங்கள்

  • அலை உறங்கும் கடல்
  • புவியிலோரிடம்
  • மெல்லினம்
  • அலகிலா விளையாட்டு
  • தூணிலும் இருப்பான்
  • ரெண்டு

[தொகு] சிறுகதைத் தொகுப்புகள்

  • மூவர்
  • பறவை யுத்தம்
  • நிலாவேட்டை
  • குதிரைகளின் கதை

[தொகு] விருதுகள்

  • பாரதிய பாஷா பரிஷத்
  • இலக்கியப்பீடம் சிறந்த நாவலாசிரியர் விருது ( அலகிலா விளையாட்டு - 2003)
  • திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு (மெல்லினம் நாவலுக்காக)
  • கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது (இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2008)

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பா._ராகவன்&oldid=863279" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்