பாலம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலம் என்பது 1970 களில் வெளியான சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மதுரையில் இருந்து மாதாந்தோறும் வெளிவந்தது.

வரலாறு[தொகு]

தஞ்சாவூர் பிரகாசு மதுரையில் 1977இல் பாலம் இதழைத் துவக்கினார். 'பள்ளி அட்லாசு' அளவில் பெரிய வடிவம் கொண்ட பத்திரிகையாக இது வெளியானது. அட்டையை விடுத்து 56 பக்கங்கள் கொண்டதாக. ரூ 2. என்ற விலையில் வெளியானது.

பாலத்தின் முதல் நோக்கமும் முப்பத்திரண்டாவது நோக்கமும் இலக்கியம் ஒன்றே புதுசோ பழசோ எதுவாயினும் அதன் நோக்கம் இலக்கியமே. உங்களுக்காக உங்களுடன் கலந்து பாலம் நிறைய செய்ய விருக்கிறது. தேடவிருக்கிறது. கண்டுபிடிக்கவிருக்கிறது. அந்தப் பணியில் பக்குவம் பெற உங்களையும் அழைக்கிறது. அதைச் செய்யும் இதைச் செய்யும் என்று சொல்லில் சொல்ல ஒன்றுமில்லை. நமக்கு இறந்த காலம் தெரியும். லட்சியங்களின் கண்கூசும் ஒளியும் நமக்குப் பழக்கமே. நிகழ்காலத்தின் அலுப்பும் வறட்சியும் எதிர்காலத்தின் ஒட்டாத் தன்மையும் எட்டாத் தன்மைகளும் நாம் அறிந்தே இப்பாலத்தில் வந்து நிற்கிறோம். செயலுக்கு உதவும் கரங்கள் போதும். ஆரவாரமில்லாமல் தொடரும் பாலம் என்று பிரகாஷ் அறிவிப்போடு இதழ் வெளியானது.[1]

மொத்தம் இரண்டு இதழ்களே வெளியான நிலையில் மேற்கொண்டு வெளியாகவில்லை.

குறிப்புகள்[தொகு]

  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 142–148. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலம்_(இதழ்)&oldid=3378547" இலிருந்து மீள்விக்கப்பட்டது