பாக்கித்தானில் இந்து திருமணச் சட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தானில் ஓர் இந்து திருமணம்

பாக்கித்தானில் இந்து திருமணச் சட்டங்கள் (Hindu marriage laws in Pakistan) தொடர்பாக இரண்டு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒன்று பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் பின்பற்றப்படும் 2016 ஆம் ஆண்டின் சிந்து இந்து திருமணச் சட்டம் ஆகும். இசுலாமாபாத்து தலைநகர் பிரதேசம், பலுசிசுதான், கைபர்-பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் பின்பற்றப்படும் 2017 ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டம் மற்றொரு சட்டமாகும். இருப்பினும், இரண்டு இந்துக்களுக்கு இடையே நடைபெறும் திருமணத்தையும், ஒரு சிந்து மற்றும் மற்றொரு மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவர் ( இசுலாமாபாத்து தலைநகர் பிரதேசம், பலுசிசுதான், கைபர்-பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் ) ஆகியோருக்குமான திருமணத்தைப் பதிவு செய்ய எந்த சட்டங்களும் திருத்தங்களும் செய்யப்படவில்லை[1]

2016 சிந்து இந்து திருமணச் சட்டம்[தொகு]

பாக்கித்தானில் இயற்றப்பட்ட முதல் இந்து திருமணச் சட்டம் இதுவாகும். சிந்து மாகாணத்தில் வாழும் இந்துக்களுக்கு இது பொருந்தும். சீக்கியர்கள் மற்றும் சொராசுட்ரியர்களும் இந்த சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யலாம். [2] [1]

2016 இந்து திருமண சட்டம் சிந்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் நிசார் அகமது குக்ரோவால் முன்மொழியப்பட்டது.[3] 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிந்து மாகாண சட்டசபை இச்சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட இந்து ஆணும் பெண்ணும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யலாம். [2]

2018 ஆம் ஆண்டில், தம்பதிகளுக்கான விவாகரத்து மற்றும் மறுமண உரிமைகள் இச்சட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. விவாகரத்துக்குப் பிறகு மனைவி மற்றும் குழந்தைகளின் நிதிப் பாதுகாப்பைச் சேர்க்கும் வகையில் சட்டம் மேலும் திருத்தப்பட்டது. [4] இந்தத் திருத்தத்தை பாக்கித்தான் முசுலிம் லீக்-செயல்பாட்டு (பிஎம்எல்-எஃப்) சட்டமன்ற உறுப்பினர் நந்த குமார் கோக்லானி முன்மொழிந்தார். [5]

2018 ஆம் ஆண்டில், மிர்புர்காசு மாவட்டத்தில் சிந்து இந்து திருமணச் சட்டத்தின் கீழ் முதல் கலப்பு இந்து திருமணம் பதிவு செய்யப்பட்டது. [6]

2017 இந்து திருமணச் சட்டம்[தொகு]

இது இந்துக்களுக்கான முதல் கூட்டாட்சி அளவிலான தனிநபர் சட்டமாகும். [7] இசுலாமாபாத்து தலைநகர் பிரதேசம், பலுசிசுதான், கைபர்-பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வாழும் இந்துக்களுக்கு இது பொருந்தும். [1] இந்து திருமண மசோதாவை மனித உரிமைகள் அமைச்சர் கம்ரான் மைக்கேல் 2016 ஆம் ஆண்டில் முன்மொழிந்தார். இது 2016 ஆம் ஆண்டு பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது [8] [9] 2017 ஆம் ஆண்டில் பாக்கித்தான் ஆட்சிப்பேரவை சட்டத்தை நிறைவேற்றியது. [10] மார்ச் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பாக்கித்தான் குடியரசுத்தலைவர் மம்னூன் உசைன் இந்து திருமண சட்டத்தில் கையெழுத்திட்டு இதை சட்டமாக்கினார். [11] இந்த சட்டம் இந்துக்களுக்கு திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவு செய்வதற்கான விதிமுறைகளுக்கு வழி வகுக்கிறது மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கிறது. [12]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Sindh Hindu Marriage Act—relief or restraint?". Express Tribune. 8 June 2017. https://tribune.com.pk/story/1429958/sindh-hindu-marriage-act-relief-restraint?amp=1. Shahid Jatoi (8 June 2017). "Sindh Hindu Marriage Act—relief or restraint?". Express Tribune. Retrieved 10 November 2020.
  2. 2.0 2.1 "Sindh Assembly approves Hindu Marriage Bill". Dawn. 15 February 2016. http://www.dawn.com/news/1239719. 
  3. Hafeez Tunio (15 February 2016). "Sindh Assembly becomes first in Pakistan to pass Hindu marriage bill". Express Tribune. https://tribune.com.pk/story/1047279/sindh-assembly-becomes-first-in-pakistan-to-pass-hindu-marriage-bill?amp=1. 
  4. "Pak's Sindh to let divorced or widowed Hindu women remarry". Times of India. 11 August 2018. https://m.timesofindia.com/world/pakistan/paks-sindh-to-let-divorced-or-widowed-hindu-women-remarry/articleshow/65360976.cms. 
  5. "In its last session, Sindh Assembly grants Hindu widows right to remarry". Express Tribune. 26 May 2018. https://tribune.com.pk/story/1719327/1-last-session-sindh-assembly-grants-hindu-widows-right-remarry?amp=1. 
  6. Zulfiqar Kunbhar (6 September 2018). "First inter-caste Hindu marriage takes place in Sindh". Daily Times. https://dailytimes.com.pk/293566/first-inter-caste-hindu-marriage-takes-place-in-sindh/. 
  7. "Pakistan Senate passes landmark Hindu marriage bill". The Hindu. 18 February 2017. https://www.thehindu.com/news/international/Pakistan-Senate-passes-landmark-Hindu-marriage-bill/article17324249.ece/amp/. 
  8. "NA finally passes Hindu marriage bill". Dawn. 27 September 2016. http://www.dawn.com/news/1286344. 
  9. "Pakistani lawmakers adopt landmark Hindu marriage bill". Times of India. 27 September 2016. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  10. Yudhvir Rana (19 February 2017). "Pak senate's nod to Hindu Marriage Bill". Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  11. "Hindu Marriage Bill Becomes Law in Pakistan". News18. 20 March 2017. http://www.news18.com/news/world/hindu-marriage-bill-becomes-law-in-pakistan-2-1361817.html. 
  12. "Pakistan approves Hindu Marriage Bill after decades of inaction". Times of India. 9 February 2016. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.