பர்கத்துல்லா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்கத்துல்லா கான்(Barkatullah Khan 25 அக்டோபர் 1920 - 11 அக்டோபர் 1973) இந்திய மாநிலமான ராஜஸ்தானின் அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். அவர் 1972 ஆண்டில் திஜாரா சட்டமன்ற தொகுதியிலிருந்து ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கல்வி[தொகு]

லக்னோவில் சட்டம் பயின்றவர்.

மாநிலங்களவை உறுப்பினர்[தொகு]

03-04-1952 முதல் 02-04-1954 வரை மற்றும் 03-04-1954 முதல் 21-03-1957 வரை, என இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1]

ராஜஸ்தானின் முதலமைச்சராக 9 ஜூலை 1971 முதல் 11 அக்டோபர் 1973 வரை பதவி வகித்தார், பதவிக்காலத்திலேயே தனது 53 வயதில் மாரடைப்பால் இறப்பெய்தினார். இராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த ஒரே முஸ்லிம் இவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

நினைவு மைதானம்[தொகு]

இவர் நினைவாக 1986 ஆம் ஆண்டு பர்கத்துல்லா கான் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.[3]

குடும்பம்[தொகு]

வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான உசி கானைத் திருமணம் செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்கத்துல்லா_கான்&oldid=3522111" இலிருந்து மீள்விக்கப்பட்டது