பருல் சேகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருல் சேகல்
2015 பென் இலக்கிய விருது விழாவில்
பணிநூல் விமர்சகர், ஆசிரியர்

பருல் சேகல் (Parul Sehgal) ஓர் இலக்கிய விமர்சகர் ஆவார். இவரது கட்டுரைகள் இலக்கிய இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவர் தி நியூயார்க் டைம்ஸ் புக் ரிவியூ மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றின் புத்தக விமர்சகர் ஆவார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், நியூயார்க் நகர பல்கலைக்கழகத்திலும் கற்பித்தல் பணிகளை மேற்கொள்கிறார். [1]

சேகல் இந்திய பெற்றோருக்கு மகளாகப் பிறந்த இவர் இந்தியா, ஹங்கேரி, பிலிப்பைன்ஸ் மற்றும் வடக்கு வர்ஜீனியாவில் வளர்ந்தார். [2] இவர் மாண்ட்ரீலில் உள்ள மக்கில் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் . பிரிவில் பட்டம் பெற்ற பிறகு, இவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்ற டெல்லி சென்றார். புக்ஃபோரம், ஸ்லேட், டின் ஹவுஸ், என்.பி.ஆர், லிட்டரரி ரிவியூ, ஓ, தி ஓப்ரா இதழ், தி ப்ளைன் டீலர், தி ஐரிஷ் டைம்ஸ் மற்றும் டைம் அவுட் நியூயார்க் ஆகியவற்றுக்கான இலக்கிய விமர்சனங்களை இவர் எழுதியுள்ளார்.

இவர் 2008 பான் ஆப்பிரிக்க இலக்கிய மன்றத்தின் ஒன் வேர்ல்ட் பரிசை வென்றார். [3]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-14. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  2. Scott McLemee (January 26, 2011). "Scott McLemee Interviews Balakian Recipient Parul Sehgal". Critical Mass. National Book Critics Circle Board of Directors. பார்க்கப்பட்ட நாள் August 1, 2014.
  3. Parul Sehgal பரணிடப்பட்டது 2021-04-14 at the வந்தவழி இயந்திரம், About page

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருல்_சேகல்&oldid=3596742" இலிருந்து மீள்விக்கப்பட்டது