பராரியா திரள் பாலியல் வல்லுறவு (1988)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பராரியா திரள் பாலியல் வல்லுறவு (Pararia mass rape (1988)) என்பது 1980 மற்றும் 1990 களுக்கு இடையில் இந்தியாவின் பீகாரின் பல பகுதிகளை பாதித்த சாதி அடிப்படையிலான வன்முறையாகும். இந்தச் சம்பவம் தியோகர் கோவில் நகரத்திலிருந்து சுமார் 30 அமைந்துள்ள பராரியா கிராமத்தில் நடந்தது. பீகார் காவல்துறையின் ஒரு குழுவால் 26 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்.[1] பாதிக்கப்பட்டவர்கள் யாதவர்கள் , பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதியினைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.[2]

சம்பவம்[தொகு]

1988 ஆம் ஆண்டில், பீகார் காவல்துறையின் ஒரு திடீர்ச் சோதனைக் குழு பராரியாவின் யாதவ கிராமத்தில் சோதனை நடத்தியது. அந்தக் குழு அங்கு, 13 முதல் 50 வயதுக்குட்பட்ட குறைந்தது 14 பெண்கள் குழு பாலியல் வால்லுறவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சில ஆதாரங்கள் 5 முதல் 19 பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியது.[3] [4]மேலும் அந்தக் குடும்பத்தில் இருந்த ஆண் குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மதிப்புமிக்க பொருட்கள், நகைகள் மற்றும் பாத்திரங்களையும் காவல் துறையினர் கொள்ளையடித்தனர். பெண்கள் அணிந்திருந்த மூக்கு வளையங்கள் மற்றும் அணிந்திருந்த பல பொருட்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன, இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒரு 76 வயது ஆண் ஒருவர் தனது பேத்தியினை காப்பாற்ற முயன்ற போது குண்டாந்தடி கொண்டு தாகப்பட்டார்.சில நாட்களுக்கு முன்பு காவலர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கப்படுவதற்காக இந்த நிகழ்வு நடந்ததாக ஒரு சில பொதுமக்கள் கூறினர் [3] ஆனால் புனாசி அணை திட்டத்திற்கு நகரவாசிகள் செல்ல மறுத்ததற்கு பதிலாகவே இது போன்ற சம்பவம் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினர். தாக்கப்பட்ட பெண்களில் சிலர் நீதித்துறை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.[5] இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஓ.பி.சின்ஹா, "ராதியா தேவி எனும் பெண் தன்னை தரையில் தூக்கி வீசி எரிந்ததாகவும், இரண்டு சவுக்கிதார்கள் தனது கால் மற்றும் கைகளைப் பிடித்துக் கொண்டாதாகவும் மூன்று காவலர்கள் தன்னை வல்லுறவு செய்ததாகவும் கூறினார்.

இந்த வழக்கில், நீதிபதி ஐந்து காவல்துறை அதிகாரிகளை "தவறான முறையில் சிறைப்பிடித்ததற்காகவும்" பலவந்தமாக பாலியல் வல்லுறவு செய்ததாகவும் குற்றம் சாட்டினார். பீகாரில் காவல்துறையினரின் மீது அதிகப்படியான குற்றச்சாட்டப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்று.

விசாரணை[தொகு]

முதலமைச்சர் பகவத் ஜா ஆசாத் நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தார், ஆனால் விசாரணை முதன்மையாக பீகார் காவல்துறையை சார்ந்ததாக இருந்தது. நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான நோனியா தேவியின் பரிசோதனையில், அவளது புணர்புழையில் இறந்த விந்தணுக்கள் கண்டறியப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் இருந்ததைக் கூறினார். ஒரு அறிக்கையின்படி, அவள் நீண்ட காலத்திற்கு முன்பே கணவனிடமிருந்து பிரிந்துவிட்டதாக கூறிய வழக்கறிஞரின் கருத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார், மேலும் நீதிபதி அவளை "சாரா வினைஞர்" என்று அறிவித்தார். இருப்பினும், இந்தியா டுடே நடத்திய விசாரணையில், அவர் தனது கணவர் மோதி யாதவுடன் தங்கியிருப்பது தெரியவந்தது. [5] அந்தப் பெண்ணின் கணவர்,அவர்களது நான்கு வயது குழந்தையுடன் அவர்களுடனேயே தங்கி இருந்ததாகவும் தனது மனைவி வல்லுறவிற்கு ஆளானது அவரது குற்றம் இல்லை எனவும் கூறியதாக எழுத்தாளர் ஆர்தர் பொன்னர் தனது விசாரணை தகவல்களில் கூறினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sengupta, Uttam. Pararia mass rape: After it shocked India, judgement doubts character of the women. Archived from the original on 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021. {{cite book}}: |website= ignored (help)
  2. Shiri Ram Bakshi; Shiri Ram Bakshi; Sita Ram Sharma; S. Gajrani (1998). Contemporary Political Leadership in India George Fernandes, Defence Minister of India. APH Publishing. pp. 100–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170249996. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  3. 3.0 3.1 Geetanjali Gangoli (2016). Indian Feminisms: Law, Patriarchies and Violence in India. Routledge. p. 91.
  4. United States. Congress. Senate. Committee on Foreign Relations (1991). Convention on the Elimination of All Forms of Discrimination Against Women: Hearing Before the Committee on Foreign Relations, United States Senate, One Hundred First Congress, Second Session, August 2, 1990, Volume 4. U.S. Government Printing Office. p. 103.
  5. 5.0 5.1 Sengupta, Uttam. Pararia mass rape: After it shocked India, judgement doubts character of the women. Archived from the original on 2021-01-09. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.Sengupta, Uttam. . India Today. Archived from the original on 9 January 2021. Retrieved 7 January 2021.