பயனர்:Tnse jegatheeswari diet kar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபிலாலஜி

ஃபிலாலஜி என்பது வரலாற்று மூலங்களிலிருந்து மொழியைப் பற்றிப் படிப்பதாகும். இது இலக்கியத் திறனாய்வு, வரலாறு மற்றும் மொழி நூலாராய்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. ஃபிலாலஜி என்பது பொதுவாக இலக்கியப் புத்தகங்களைப் பற்றியும் எழுதப்பட்ட பதிவுகள் பற்றியும், அதன் நம்பகத்தன்மையை நிலைநாட்டுதல் பற்றியும், அதன் மூலத்தைப் பற்றியும் வரையறுப்பதாகும். இவ்வகை ஆராய்ச்சி செய்பவர் ஃபிலாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். ஃபிலாலஜி என்பது ஆங்கிலத்தில், அதன் பழைய உபயோகமான, ஒப்புமை மற்றும் வரலாற்று நூலாராய்ச்சியைப் பற்றியதாகும்.

தொன்மை வாய்ந்த மொழிகளைப் பற்றி அறியும் கல்விக்கு கிளாசிக்கல் ஃபிலாலஜி எனப்படும். கிளாசிக்கல் ஃபிலாலஜி பெர்க்காமம் மற்றும் அலெக்சாண்டிாியா நூலகங்களிலிருந்து 4 - ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது கிரேக்க மற்றும் ரோமானிய பேரரசுகளால் தொடர்ந்து வளர்க்கப்பட்டடது. மொழி ஆராய்ச்சி இஸ்லாமிய பொற்காலத்தில் பாதுகாத்து, மேம்படுத்தப்பட்டது. இறுதியாக மறுமலர்ச்சிக் காலத்தில் ஐரோப்பிய கல்வியாளர்களால் வளர்க்கப்பட்டது. இதனுடன் ஐரோப்பிய மொழிகளான ஜெர்மன், செல்டிக், யுரேசியா மற்றும் ஆசிய மொழிகளான சமஸ்கிருதம், பெர்சியன், அரேபியன், சைனீஸ் ஆகிய மொழிகள் இணைந்தன. இந்தோ-ஐரோப்பிய ஆராய்ச்சியானது இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் ஒப்புமையை ஆராய்ச்சி செய்தது. பெர்டினன்ட் டீ சாசர் ஒரே காலத்தில் நிகழக் கூடிய பகுப்பை வலியுறுத்தினார். இது வரலாற்றுப் பகுப்பிலிருந்து வேறுபட்டது. இந்த வேறுபாட்டைத் தொடர்ந்து கட்டமைப்பியல் உருவானது. அத்துடன் சாம்ஸ்கியின் மொழி ஆராய்ச்சி சொற்றொடாியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.


சொல் வரலாறு[தொகு]

ஃபிலாலஜி (Philology) என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான (Philologia) ஃபிலாலஜியா என்ற சொல்லில் இருந்து உருவானது. (Philos) ஃபிலாஸ் என்றால் நேசி்த்தல் என்றும் (logos) லோகஸ் என்றால் கற்றல் என்றும் பொருள்படும் அதாவது ஃபிலாலஜி என்பது கற்றலை நேசித்தல் என்று பொருள் கொள்ளலாம். இலத்தீன் மொழியில் இந்தச் சொல் சிறிது மாறுபட்டு காணப்படுகிறது. பிறகு 16 ம் நூற்றாண்டில் ஆங்கில மொழியில் "லவ் ஆப் லிட்டரேச்சர்" என்ற பொருளில் சேர்ந்தது.


மேற்கோள்கள்[தொகு]