பயனர்:Thennakoan/மணல்தொட்டி/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழி[தொகு]

மொழி என்பது மொழியியல் அடிப்படையில், இரண்டு பொருற்களைக் கொண்டுள்ளது. ஒன்று கருத்துப் பரிமாற்றம் சார்ந்தது. மற்றொன்று மொழியியல் கட்டமைப்பு சார்ந்தது.

சொல்[தொகு]

சொல் என்பது ...

எழுத்து[தொகு]

எழுத்து என்பது ஒரு சொல்லாகும். அது ஒரு மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும் அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படும். ஒரு எழுத்து ஒலிவடிவம் வரிவடிவம் எனும் இரண்டையும் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டு: "அ" எனும் எழுத்துக்கு ஒலிவடிவமும் வரிவடிவமும் உண்டு. அவ்வகையில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிவடிவம் வரிவடிவம் இரண்டும் உண்டு.

சொற்றொடர்[தொகு]

சொற்றொடர் என்பது

வாக்கியம்[தொகு]

வாக்கியம் என்பது

வார்த்தை[தொகு]

வார்த்தை என்பது

ஒலிவடிவம்[தொகு]

ஒலிவடிவம் என்பது எழுத்தை ஒலிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கும்.

வரிவடிவம்[தொகு]

வரிவடிவம் என்பது ஒரு எழுத்தை எழுதப்படும் வடிவத்தைக் குறிக்கும்.

முதெலெழுத்து[தொகு]

முதலெழுத்து என்பது தமிழ் மொழியில் வழங்கும் அடிப்படையான ஒலிகளையும் அவற்றின் வரிவடிவங்களையும் குறிக்கும். அவ்வகையில் உயிரெழுத்துகள் பன்னிரண்டையும் மெய்யெழுத்துகள் பதினெட்டையும் முதலெழுத்து எனப்படும். தமிழ் எழுத்துக்களை முதலெழுத்து சார்பெழுத்து என இரண்டாக வாகைப்படுத்துவர்.

சார்பெழுத்து[தொகு]

சார்பெழுத்து என்பது இரண்டு ஒலிகளைக் குறிக்கும் உயிர்மெய் எழுத்துகளையும் சூழலுக்கு ஏற்ப நீண்டோ குறுகியோ ஒலிக்கும் எழுத்துகளைக் குறிக்கும். (மொழிக்கு அடிப்படையான ஒலிகளைக் குறிக்காது.)

உயிரெழுத்து[தொகு]

உயிரெழுத்து என்பது தமிழ் நெடுங்கணக்கில் உள்ள அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய பன்னிரண்டு எழுத்துகளைக் குறிக்கும். இவற்றைப் பிற எழுத்துகளின் துணையின்றி தனித்தனியாக ஒலிக்கலாம். ஒலிக்கும் கால அளவைப் பொறுத்து இவற்றை குறில், நெடில் என இரு வகைப்படுத்துவர்.

உயிரெழுத்து குறில்[தொகு]

உயிரெழுத்து குறில் என்பது தமிழ் இலக்கணம் வகைப்படுத்தியுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ ஆகிய 5 எழுத்துகளும் உயிரெழுத்து குறில் எனப்படும். இவற்றை ஒலிக்கும் கால அளவு ஒரு மாத்திரையாகும்.

மாத்திரை[தொகு]

தமிழ் இலக்கண நூல்கள் குறிக்கும், மாத்திரை என்பது ஒரு எழுத்தை ஒலிக்கும் கால அளவை குறிக்கப் பயன்படும் சொல்லாகும். அதாவது ஒரு மாத்திரை அளவு என்பது நாம் நமது விரல்களால் ஒரு நொடி நொடிக்கும் நேரம் அல்லது கண்ணை சிமிட்டும் நேரத்தின் அளவு ஆகும். அதன்படி தமிழில் உள்ள எழுத்துகளை அரை மாத்திரை அளவு ஒலிக்கும் எழுத்துகள், ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் எழுத்துகள், இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் எழுத்துகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உயிரெழுத்து நெடில்[தொகு]

உயிரெழுத்து நெடில் என்பது தமிழ் இலக்கணம் வகைப்படுத்தியுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய 7 எழுத்துகளும் உயிரெழுத்து நெடில் ஆகும். இவற்றை ஒலிக்கும் கால அளவு இரண்டு மாத்திரையாகும். அதாவது இரண்டு நொடி நொடிக்கும் நேரம்.

கூட்டுயிர் அல்லது சந்தியக்கரம்[தொகு]

கூட்டுயிர் அல்லது சந்தியக்கரம் என்பது உயிரெழுத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள எழுத்துகளில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறிக்கும். பழம் இலக்கண நூல்கள் இவற்றை அஇ, அஉ, என்றும் அய், அவ் என்றும் எழுதப்பட்ட எழுத்துகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thennakoan/மணல்தொட்டி/2&oldid=3433093" இலிருந்து மீள்விக்கப்பட்டது