பயனர்:Shriheeran/யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்று அறிமுகம்[தொகு]

சூழலியல்[தொகு]

துறைமுகங்கள்[தொகு]

கரையோரங்களின் இயற்கை அமைப்பு, கேந்திர முக்கியத்துவம் ஆகிய த்ன்மைகளுக்கு ஏற்ப துறைமுகங்கள் உருவாகின. இத்தகைய ஒரு துறைமுகமே ஜம்புகோளப்படினம் ஆகும். பாளி இலக்கியங்கள் குடாநாட்டில் இது பெற்றிருந்த சிறப்பை எடுத்துக்காட்டினாலும் இதன் கிழக்குக்கரையில் அமைந்திருந்த வல்லிபுரம், நாகர்கோவில் போன்றவையும் துறைமுகங்களாக விளங்கியிருக்கலாம்.[1]

பாக்கு நீரிணையும் வரலாற்றுத் தாக்கங்களும்[தொகு]

ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டின் புவியியல் அமைவின் மூலம் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள் என்பவற்றுக்கு உள்ளாகிறது, அதன்படி முற்காலத்தில் ஈழம் என அழைக்கப்பட்ட இலங்கையும் கூட இப்படிப்பட்ட பல்வேறு தாக்கங்களுக்கும் உள்ளான நாடுகளில் ஒன்றாகும். இலங்கை ஒரு தீவு மட்டுமல்லாமல் இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்ததுமான அன்னியர்களின் வேறுநாடுளுடனான வர்த்தக நடவடிக்கையிலும் பெரும்பங்கு வகித்ததுமான நாடாக விளங்கியது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க அறிஞரான மெகெஸ்தினிஸ் இந்தியா-ஈழம் ஆகிய நாடுகளை ஒரு ஆறு பிரிப்பதாக கூறியது இப்பாக்கு நீரிணையையே ஆகும். [2] பாக்குநிணையிஒன் இரு கரைப்பகுதிகளிலும் ஏற்பட்ட அரசியல், வர்த்தக, கலாச்சாரப் பரிமாற்றங்களை நோக்கும் போது பெருமளவுக்கு இத்தகைய பரிமாற்றம் தமிழகத்தின் தென்கோடியிலிருந்து ஈழத்தின்வடமேற் பகுதியை நோக்கி ஏற்பட்டுள்ளது.

பண்டைய பெயர்கள்[தொகு]

ஈழத்துத் தமிழ் நூல்களை ஆராயும் போது யாழ்ப்பாண இராச்சியத்தின் பழைய பெயர்களாக மணற்றி, மணற்றிடல், மணற்றிடர் ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. [3] இவை மூன்றும் ஒரேயொரு பெயரின் திரிபுகள் அல்லது சாயல்களாகக் காணப்படுகின்றன. அதைவிடவும் மணவூர், மணலூர் எனும் பெயர்களும் யாழ்ப்பாணத்திற்குண்டு, எனினும் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை, ஆனால் மணற்றிடல், மணற்றிடர் போன்ற பெயர்கள் யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டுள்ளதாக சி. க. சிற்றம்பலம் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். நாகதீபம், மணிபுரம் எனும் பெயர்களும் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிங்கள மொழிச்சொல்லான வெலிகம என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பே மணலூர் என்பதாகும். இதுவே மணற்றிடல் போன்ற பெயர்கள் வரக்காரணமாக அமைந்திருக்கலாம். [4] 12 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட தென்னிந்திய கல்வெட்டு ஒன்றில் யாழ்ப்பாணத்தை வலிக்காமம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, அதுவே இன்று யாழ்ப்பாணத்தில் மேற்குப்பகுதியில் வலிகாமம் எனும் ஒரு பிரதேசம் காணப்படுகின்றது. பாண்டிய நாட்டின் முன்னைய இடங்களாக மணவை, மற்றும் மாந்தை என்பவை இருந்துள்ளதாகவும், பாண்டியர்கள் குடிபெயர்ந்த போது மாந்தை எனும் பெயரை ஒரு கரையோரப்பகுதிக்கும் (அதாவது இன்றைய மன்னார்) மணவை எனும் பெயரை இன்றைய யாழ்ப்பாணத்திற்கும் இட்டிருக்கலாம். [5] அத்துடன் சாதி மாலைப்பாட்டு எனப்படும் ஒரு தொன்மையான பாட்டுக்கொத்தில் "மாந்தையோடு மணற்றியும்" என ஒரு வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிடவும் நாகநாடு, சிங்கைநாடு, உத்தர தேசம், தமிழ்ப்பட்டினம் எனவும் பெயர்கள் உண்டு. பண்டைய ஈழத்தில் ஆரம்ப காலங்களில் வாழ்ந்த இரு குலங்களான இயக்கர் மற்றும் நாகர்களில் நாகர்கள் வாழ்ந்த இவ்வடபகுதிப் பிரதேசமே நாகதீபம், நாகநாடு எனும் பெயர்களைப் பெறக் காரணமாய் இருந்தது. அத்துடன் கிரேக்க நாடுகாண் பயனியான தொலமியும் கூட தப்பிரபேனின் (இலங்கை) வடபகுதியை "நாகதீபோய்" எனக்குறுப்பிட்டுள்ளார். [6]

பாண்டிய நாடும் ஈழமும்[தொகு]

சங்க காலங்களிலே யாழ்ப்பாண இராச்சியம் பாண்டிய நாட்டுடனான தொடர்புகளை வைத்திருந்ததாக இறையனாரர்அகப்பொருள், சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. [7]

தொல்லியற் பின்னணி[தொகு]

தமிழ் நூல்களில் யாழ்ப்பாணத்தை நாகநாடு எனவும் பாளி நூல்களில் நாகதீபம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது ஆதிகாலத்திலி இருந்தே ஆள் நடமாட்டத்திற்குட்பட்ட பிரதேசம் என்பது புலனாகின்றது. கற்கால மக்கள் இங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் தடயங்களாகக் கற்கால ஆயுதங்கள் காணப்படுகின்றன. இம்மக்களையே இலக்கியங்கள் யட்சகர்கள், நாகர்கள் என விபரித்துள்ளன. இவர்கள் விட்டுச்சென்ற கல்லாயுதங்கள் மட்டுமன்றி இவ்விடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளும் இவர்கள் மனிதர்களே என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவர்களின் வழித்தோன்றல்களே வேடுவ இனமக்களாவர். [8] யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் ஆதிக்குடிகளாக யட்சகர்களோடு வேடர்களும் குறிக்கப்படுகின்றமை அவதானிக்கத்தக்க விடயம் என கலாநிதி. சி. க. சிற்றம்பலம் அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிடுகின்றார். [9] [10] அதேவேளை யாழ்ப்பாண இராச்சியமானது சிங்கள மன்னர்களின் க்ட்டுப்பாட்டுக்குள் அடங்காது தனித்துவமான ஆட்சிமுறை ஒன்றைக் கொண்டிருக்கலாம் எனவும் இங்கு பௌத்த சமயம் பரவுவதை நாகர்கள் தடுத்திருக்கலாம் என்பதையும் அம்மக்கள் தமிழகத்துடனேயே நீண்ட காலத்தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தொல்லியற் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் எடுத்துகாட்டுகின்றன. இதற்கு உதாரணமாகப் பாளி இலக்கியங்கள் சிங்கள மன்னர்களைப்பற்றியே குறிப்பிட்டுள்ளதாகவும் நாகர்களின் வாழ்விடத்தைப்பற்றி எவ்வித குறிப்புக்களும் இல்லை எனவும் புத்தருடைய இரண்டாவது இலங்கை விஜயத்தின் போதே குறிப்பிட்டுள்ளதாகவும் கலாநிதி. சி. க. சிற்றம்பலம் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். [11]

  1. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வெளியீடு, 1993. கலாநிதி. சி. க. சிற்றம்பலம், பக்கம். 09
  2. Nicholas, C. W., 'Historical Topography of ancient and medieval Ceylon', J. R. A. S. C. B. N. S. Vol. 6, 1963. ப. 9
  3. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு - சி. க. சிற்றம்பலம், பக். 46
  4. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு - சி. க. சிற்றம்பலம், பக். 46
  5. சி. க. சிற்றம்பலம் - யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, பக்கம். 49
  6. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வெளியீடு, 1993. கலாநிதி. சி. க. சிற்றம்பலம், பக்கம். 12
  7. Maloney. C.T., The effectof Early Coastal Traffic on the Devolopment of Civilization in South India, Unpublished, Ph.D Thesis, University of Pennysylvania, 1968.
  8. Kennady K. A. R., மே. கூ. க. ,1965.
  9. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வெளியீடு, 1993. கலாநிதி. சி. க. சிற்றம்பலம், பக்கம். 52- வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
  10. யாழ்ப்பாண வைபவமாலை பக்கம். 3-4
  11. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வெளியீடு, 1993. கலாநிதி. சி. க. சிற்றம்பலம், பக்கம். 55- வரலாற்றுக்கு முற்பட்ட காலம்