திரைப்படத் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(படத்தொகுப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
A film editor at work in 1946.

படத்தொகுப்பு என்பது திரைப்பட உருவாக்கத்தில் முக்கியமான ஒரு செயற்பாடு ஆகும். இது ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளை இணைத்தல் மீண்டும் அவற்றை ஒன்றுடன் ஒன்று உரிய முறையில் இணைத்து முழுத் திரைப்படத்தை உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

படத்தொகுப்பு என்பது திரைப்படத்துக்கே உரிய தனித்துவமான செயற்பாடாகும். இது திரைப்படக் கலையை நிழற்படக்கலை, நாடகம், நடனம், எழுத்து போன்ற பிற கலைகளினின்றும் வேறுபடுத்துகிறது. வெறுமனே, காட்சிகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதோ அல்லது சிலவற்றை வெட்டி நீக்குவதோ மட்டும் படத்தொகுப்பு ஆகிவிடுவது இல்லை.[1] ஆனால் படத்தொகுப்பு ஒரு திரைப்படத்தை வெற்றி பெறவோ அல்லது தோல்வி அடையவோ செய்யக்கூடிய ஒரு கலையாகும். ஒரு படத்தொகுப்பாளர் படிமங்கள், கதை, இசை, இசைவு, வேகம், நடிப்பு போன்ற பல விடயங்களைக் கையாளுகிறார். படத்தொகுப்பின்போது அதனை மீள இயக்குவதுடன், சில சமயங்களில் அதனைத் திரும்ப எழுதுகிறார் என்றும் சொல்லலாம். படத்துண்டுகளை ஒழுங்கு படுத்துவதற்கு இருக்கக்கூடிய எண்ணற்ற வழிகளைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான, ஒருங்கிணைந்த, முழுமை கொண்ட ஒரு திரைப்படத்தைக் கொடுப்பதில் பெரும்பங்கு படத்தொகுப்பாளருக்கு உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்படத்_தொகுப்பு&oldid=3315879" இலிருந்து மீள்விக்கப்பட்டது