பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடுப்பாட்டக்காரர்களின் குறிப்பிடத்தக்கமையை வரையறுப்பது தொடர்பான பரிந்துரைகள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. தற்போது உள்ளூர் போட்டியில் ஒரே ஒரு ஆட்டத்தில் ஒரே ஒரு ஓட்டம் பெற்றவர்கள் உட்பட துடுப்பாட்டக்காரர்கள் பற்றி 6000+ கட்டுரைகள் உள்ளன.

எடுத்துக்காட்டுகள்:

இவர்கள் பற்றிய அனைத்துத் தகவலும் http://cricketarchive.com என்னும் ஒரே ஒரு தரவுத்தளத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன. இத்தகைய தகவல் கிரிக்கெட் பற்றிய ஒரு தரவுத் தளத்தில் இருக்கலாமே ஒழிய ஒரு பொதுவான கலைக்களஞ்சியத்தில் இருப்பதற்கான குறிப்பிடத்தக்கமை இல்லை. குறிப்பிடத்தக்கமை இல்லா இக்கட்டுரைகள் தொடர்ந்து விரிவு பெறுவதற்கான எந்த விதமான அறிகுறியும் இல்லை. --இரவி (பேச்சு) 12:30, 13 ஏப்ரல் 2014 (UTC)


ஆங்கில விக்கியில் எந்தக் குறிப்பிடத்தக்க கொள்கையை முன்வைத்து இக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் விக்கியில் ஆங்கில விக்கிக் கட்டுரைகளை விட இறுக்கமான வரையறை அமையுமா? ஆங்கில விக்கியிலும் இவை 2 வரிக் கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது. --Natkeeran (பேச்சு) 18:14, 13 ஏப்ரல் 2014 (UTC)

//தமிழ் விக்கியில் ஆங்கில விக்கிக் கட்டுரைகளை விட இறுக்கமான வரையறை அமையுமா?//

தமிழ் விக்கிப்பீடியா ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு அல்லது அதனை விடச் சுமாரான தரத்தில் இருந்தால் போதும் என்கிறீர்களா? :)

//ஆங்கில விக்கியில் எந்தக் குறிப்பிடத்தக்க கொள்கையை முன்வைத்து இக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. //

பார்க்க: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28sports%29#Cricket

ஆனால், இது

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28sports%29#Basic_criteria

சுட்டும்

Trivial coverage of a subject by secondary sources may be used to support content in an article, but it is not sufficient to establish notability. This includes listings in database sources with low, wide-sweeping generic standards of inclusion

என்பதில் இருந்து முரண்படுகிறது.

தவிர, பொதுவான நபர்களுக்கான குறிப்படத்தக்கமை வரையறையில்

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28people%29#Additional_criteria

சுட்டுவதாவது:

conversely, meeting one or more does not guarantee that a subject should be included.

தற்போதுள்ள பற்பல துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28people%29#Failing_basic_criteria_but_meeting_additional_criteria

அடிப்படையில் ஒன்றிணைக்க கோரவும் முடியும்.

//ஆங்கில விக்கியிலும் இவை 2 வரிக் கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது. //

ஆம், ஆங்கில விக்கியிலேயே 2 வரிகள் தான், வேறு எந்த உலக விக்கிப்பீடியாவிலுமே இவர்கள் தொடர்பான கட்டுரைகள் இல்லை என்பதால் தான் இவர்கள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவர்களா என்ற கேள்வி எழுகிறது.

https://en.wikipedia.org/wiki/Talk:M._Sanjeewa

பார்த்தால், இது துடுப்பாட்டத் திட்ட அளவிலேயே கூட ஒரு குறை முக்கியத்துவம் உள்ள ஒரு குறுங்கட்டுரையாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது போல 13,422 குறை முக்கியத்துவ குறுங்கட்டுரைகளை ஆங்கில விக்கிப்பீடியா துடுப்பாட்டத் திட்டம் கொண்டுள்ளது.

https://en.wikipedia.org/wiki/Wikipedia:WikiProject_Cricket/Assessment

அவர்களின் கட்டுரைகளில் கணிசமான எண்ணிகை இத்தகையதே என்பதால் ஒட்டு மொத்த திட்டத்தின் தரத்தைக் கீழ் இழுப்பதிலும் இவ்வாறான கட்டுரைகளே முக்கியப் பங்காற்றுகின்றன.

ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே குறிப்பிடத்தக்கமை ஏற்புடைய இவர்களை நாம் ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றால், இதே போல் மற்ற பல கொள்கைகளுக்கும் ஆங்கில விக்கிப்பீடியா கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா? இல்லை, தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு தான் முடிவு செய்ய முடியும் என்றால், இந்தத் தலைப்பு குறித்தும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கொள்கை வகுப்பதில் தவறு இல்லை. அதனை முன்னிட்ட உரையாடலின் தொடக்கமே இது. நன்றி.--இரவி (பேச்சு) 20:50, 13 ஏப்ரல் 2014 (UTC)

எப்பொழுதும், தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற மாதிரியே நாம் விதிகள் எழுத வேண்டும். கொள்கை வகுப்பதில் தவறு இல்லை, கொள்கையை இறுக்கமாக வகுப்பதில்தான் சிக்கல். ஏன் என்றால் பல அறியப்பெற்ற தமிழ் துடுப்பாட்ட வீரர்கள் ஆங்கில விக்கி வரையறைக்குள் வரமாட்டார்கள். அதாவது ஒசுகர்/கோலிவுட் தரத்துக்கு ஏற்ற தழிழ் படங்கள் பற்றித்தான் கட்டுரைகள் அமையலாம் போன்று விதிகள் அமைக்க முடியாது. Notability தொடர்பான முரண்பாடுகள், கொள்கை/நடைமுறைச் சிக்கல்களை விடுத்து பெருந்தொகைப் பக்கங்களுக்கு வார்ப்புரு இடுதல், இணைத்தல், நீக்குதல் என்று செய்வது முறையன்று, ஆபத்தானது என்பதையே நான் பல இடங்களில் சுட்டிக் காட்ட முயல்கிறேன். --Natkeeran (பேச்சு) 20:58, 13 ஏப்ரல் 2014 (UTC)

துடுப்பாட்டம் ஒரு பன்னாட்டு விளையாட்டு. இதற்கும் தமிழ்ச் சூழலைக் காட்டிச் சலுகை வேண்டுமா? இப்பகுப்பில் உள்ள பெரும்பான்மை வீரர்கள் பன்னாட்டு வீரர்களே.

//பல அறியப்பெற்ற தமிழ் துடுப்பாட்ட வீரர்கள் ஆங்கில விக்கி வரையறைக்குள் வரமாட்டார்கள்.//

ஆங்கில விக்கி வரையறை ஏற்கனவே மிக இளக்கமாக இருப்பதால் தான் இந்த உரையாடலே. நாம் இன்னும் கொள்கை ஏதுமே வகுக்காத நிலையில் குறிப்பிடத்தக்க தமிழ் வீரர்கள் யாரும் விட்டுப்போவார்கள் என்று எண்ண இடம் இல்லை. எடுத்துக்காட்டுகள் தர இயலுமா?

//பெருந்தொகைப் பக்கங்களுக்கு வார்ப்புரு இடுதல், இணைத்தல், நீக்குதல் என்று செய்வது முறையன்று, ஆபத்தானது என்பதையே நான் பல இடங்களில் சுட்டிக் காட்ட முயல்கிறேன்//

இப்போது இக்கொள்கைகளை வகுத்து நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவது தவறான முற்காட்டாக மாறும். பின்னர் ஒரு பிரச்சினையை எழுப்பினால் ஏன் முன்பே சுட்டிக் காட்டவில்லை, ஏன் எல்லா பிரச்சினைகளையும் ஒன்றாக குவிக்கிறீர்கள், அதற்கு ஒரு வரைமுறை இதற்கு ஒரு வரைமுறையா என்ற கேள்வி வரும் :) --இரவி (பேச்சு) 21:25, 13 ஏப்ரல் 2014 (UTC)

துடுப்பாட்டக்காரர்கள் தொடர்பாக பின்வரும் குறிப்பிடத்தக்கமை வரையறையை முன்வைக்கிறேன்:

ஒரு துடுப்பாட்டக்காரர் குறிப்பிடத்தக்கவராக கருதப்பட பன்னாட்டு தேர்வுத் துடுப்பாட்டம், ஒரு நாள் போட்டிகள், 20-20, முதல் தரம், A-level ஆகிய ஏதேனும் ஒரு பிரிவிலாவது விளையாடியிருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் (அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து அன்று)

  • ஒரு மட்டையாளர் என்றால் குறைந்தது 1000 ஓட்டங்கள்
  • ஒரு பந்து வீச்சாளர் என்றால் குறைந்தது 50 விக்கெட்டுகள்
  • 8 ஒரு கள வீரர் என்றால் குறைந்தது 50 பிடிகள் / stumpingகுகள்

பெற்றிருக்க வேண்டும்.

இதற்குக் குறைவான அளவில் விளையாடியிருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட, நம்பகமான ஊடகங்களில் இருந்து அவரது விளையாட்டுத் திறனைப் பற்றிய குறிப்புகள் இருந்தால் (தரவுத் தளங்களில் இருந்து அன்று) அவர்களையும் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை உள்ளவர் என்று கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, புதிதாக வந்து புகழ் அடையத் துவங்கி உள்ள வீரர்கள் இதன் கீழ் வரலாம். அல்லது, திறமையிருந்தும் விளையாட்டு அரசியல் காரணாமகவும் திடீர் இறப்பு காரணமாகவும் ஆடாமல் நின்றுபோனவர்களைப் பற்றி எழுதவும் இது உதவும். இந்தக் குறிப்பிடத்தக்கமை வரையறை பற்றி அனைவரது கருத்துகளையும் வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:54, 21 ஏப்ரல் 2014 (UTC)

குறிப்பிடத்தக்கமை வரையறை குறித்த வேறு பரிந்துரைகள், மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லா நிலையில் மேற்கண்ட பரிந்துரை குறிப்பிடத்தக்கமை வரையறையாக மே 1, 2014 முதல் நடைமுறைக்கு வரும். நன்றி.--இரவி (பேச்சு) 17:48, 24 ஏப்ரல் 2014 (UTC)


மேல் முன்வைக்கப்பட்ட வரையறைக்கு அமைய, இலங்கைத் தமிழ் துடுப்பாட்ட வீரர் ஒருவர் கூட தேற மாட்டார். இலங்கையில் இனப்பாகுபாடு, ஈழப்போர் காரணமாக இலங்கைத் தமிழர் யாரும் குறிப்பிட்ட "பன்னாட்டுப்" போட்டிகளில் கலந்து கொண்டிக்க மாட்டார்கள். ஆனால், உள்ளூர்களில் அறியப்பெற்றவர்கள். எ.கா வடக்கின் பெரும் போர் (Battle of the North) என்ற ஈழத்தின் இரு பெரும் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு முக்கிய போட்டி. இதில் பங்குபெற்று பல வீரர்கள் அறியப்பெற்றவர்கள். ஆகவே, "பன்னாட்டு தேர்வுத் துடுப்பாட்டம்" போட்டியில் மட்டும் கலந்து கொண்ட வீரர்கள் மட்டும் பற்றி கட்டுரைகள் இடம்பெறு வேண்டும் என்பது "உலகத் தரச் சினிமா" பற்றி மட்டும் கட்டுரைகள் இடம்பெற வேண்டும் என்பது போல உள்ளது. --Natkeeran (பேச்சு) 18:04, 27 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், இவ்வரையறை பன்னாட்டுப் போட்டிப் பங்கேற்பைக் கட்டாயம் ஆக்கவில்லை. முதல் தர துடுப்பாட்டம் என்பது உள்ளூரில் ஆடும் போட்டிகளையும் உள்ளடக்கியது தான். எடுத்துக்காட்டுக்கு, ரஞ்சிக் கோப்பை--இரவி (பேச்சு) 05:17, 30 ஏப்ரல் 2014 (UTC)
குறிப்பிடத்தக்கமை வரையறை குறித்த வேறு பரிந்துரைகள், மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லா நிலையில் மேற்கண்ட பரிந்துரை குறிப்பிடத்தக்கமை வரையறையாக மே 9, 2014 முதல் நடைமுறைக்கு வரும். நன்றி.--இரவி (பேச்சு) 12:12, 2 மே 2014 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியை விட இறுக்கமான தமிழ் விக்கி குறிப்பிடத்தக்க கொள்கைகள்[தொகு]

ஆங்கில விக்கியில் இக் கட்டுரை இருக்கத் தகுதி உள்ளது. ஆனால் தமிழ் விக்கியில் இருக்க இல்லை. அப்படியானால், தமிழ் விக்கியில் ஆங்கில விக்கியை விட இறுக்கமான குறிப்பிடத்தக்க கொள்கை இருக்கிறதா? அதற்கு ஏற்பவே விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தற்போதைய என்பதில் நியமிக்கப்பட்டுள்ளன. --Natkeeran (பேச்சு) 14:14, 16 மே 2014 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவின் குறிப்பிடத்தக்கமை வரையறையைக் காட்டிலும் இந்த வரையறை இறுக்கமாக இருப்பதாகச் சொல்கிறீர்களே? ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பதை எல்லாம் அப்படியே இங்கு ஏற்றுக் கொள்கிறோமா? நாம் சொந்தமாக மூளையைப் பயன்படுத்த கூடாதா? :) குறிப்பிடத்தக்கமையை வாக்கெடுப்பு வைத்து முடிவு செய்யும் நடைமுறை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கிறதா?--இரவி (பேச்சு) 14:28, 16 மே 2014 (UTC)[பதிலளி]
  • முக்கிய கொள்கை மாற்றம் என்பதாலும், ஆயிரக்கணக்கான பக்கங்களை பாதிக்கும் என்பதாலும் பரந்த வாக்கெடுப்புக்குப் பின்பு சேர்ப்பது பொருந்தும்.
  • ஆங்கில விக்கியிலும் பார்க்க இளகிய குறிப்பிடத்தக்க கொள்கைகளை வரையறை செய்ய வேண்டும் என்று நீங்களே பல இடங்களில் ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அப்படி இருந்தும், ஆங்கில விக்கியிலும் இறுக்கமான கொள்கையையே முன்மொழிந்துள்ளீர்கள். எனக்கு இத் துறை பரிச்சியம் இல்லை. ஆனால் உங்கள் நீக்கல் பரிந்துரைகளில் இருந்து அப்படி பார்க்க முடிகிறது. --Natkeeran (பேச்சு) 14:21, 16 மே 2014 (UTC)[பதிலளி]

ஒரே கருத்தைப் பல இடங்களில் சொல்வதைத் தவிர்க்க விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு பக்கத்தில் மட்டும் இனி உரையாடுவோம்.--இரவி (பேச்சு) 15:03, 16 மே 2014 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பான இணக்க முடிவை எட்டுவதற்கான உரையாடல் நிகழும் சூழல் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை என்பதால் தற்காலிகமாக இந்தக் குறிப்பிடத்தக்கமை வரையறையை எட்டுவதற்கான முயற்சியைக் கை விடுகிறேன். தகுந்த இடங்களில் https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28people%29 வரையறையை முன்வைத்து உரையாடுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:40, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]