பகுப்பு பேச்சு:தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பு தாய்ப்பகுப்பாக இருப்பதால் துணைப் பகுப்புக்கள் சரியான விதத்தில் மாற்றப்படல் வேண்டும். பகுப்பு:தமிழர் இனுள் இப்பகுப்பினுள் இருக்கத் தகுந்த பல துணைப்பகுப்புக்கள் உள்ளன. பகுப்பு:தமிழ் மொழி என்னும் பகுப்பினுள் மொழி தொடர்பான பகுப்புக்கள் கட்டுரைகளை பகுக்கலாம் என்று எண்ணி அப்பகுப்பைத் தொடங்கினேன். ஏனைய பயனர்களின் கருத்துக்கள் வேண்டப்படுகிறது. நன்றி. --கோபி 16:40, 21 மார்ச் 2007 (UTC)

தமிழ் வேறு, தமிழ் மொழி வேறு எனில் பகுப்பு:தமிழ் எதனைக் குறிக்கிறது? தமிழ்ப் பண்பாட்டினையா? --Sivakumar \பேச்சு 16:52, 21 மார்ச் 2007 (UTC)
தமிழ் என்ற சொல், இன்று மொழியாயே முதன்மையாக குறிக்கின்றது. பழங்காலத்தில் நிலத்தையும் குறித்தது. --Natkeeran 16:59, 21 மார்ச் 2007 (UTC)

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் போன்ற பல அம்சங்களையும் உள்ளடக்கும் பகுப்பொன்று தாய்ப்பகுப்பாக இருப்பது பொருத்தமானது. பகுப்பு:தமிழர் அத்தகைய முழுமையைத் தருவதாகத் தெரியவில்லை. --கோபி 16:56, 21 மார்ச் 2007 (UTC)

தனியாகத் தமிழ் மொழி என்று பகுப்பு தேவை இல்லையே? தமிழ் பகுப்பின் கீழேயே தரலாம்--ரவி 17:56, 21 மார்ச் 2007 (UTC)

தமிழ் பகுப்பின் கீழ் மொழி மட்டுமில்லாமல் மொழியுடன் இணைந்த பண்பாடு, வாழ்வியல் அம்சங்களும் இடம்பெறுகின்றன. அதனாற்றான் தமிழ் மொழி என்ற தனிப்பகுப்பை உருவாக்கினேன். பகுப்பு:தமிழ் தாய்ப்பகுப்பாக உள்ளதால் அதற்கேற்பச் சில மாற்றங்கள் தேவையென உணர்க்றேன். சற்று யோசித்து, கலந்துரையாடிச் செய்ய வேண்டிய மாற்றங்கள். --கோபி 18:10, 21 மார்ச் 2007 (UTC)

தாய்ப்பகுப்பின் கீழ் நேரடியாக கட்டுரைகளை இணைக்கலாம் தானே? ஏற்கனவே, தமிழ்ப் பகுப்பின் கீழ் உள்ள கட்டுரைகளை நகர்த்துவது வேலைப்பளுவை அதிகரிக்கும். தவிர, தற்காலத்தில் தமிழ் என்பது மொழியைத் தவிர அது சார்ந்த பிற விதயங்களையும் குறித்தாலும் தமிழ் என்றால் மொழி என்று தான் புரிந்து கொள்ளப்படும். எனக்கென்னவோ தமிழ் மொழி என்பது தேவையற்றதாகத் தோன்றுகிறது. --ரவி 18:25, 21 மார்ச் 2007 (UTC)

தாய்ப்பகுப்புத் தலைப்பு : தமிழ் எதிர் தமிழியல்[தொகு]

தமிழியல் என்பது தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடு, வரலாறு, சமூகம், அறிவியல் போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத் தாய்ப்பகுப்பில் தமிழ் பகுப்பின் கீழ் மொழி மட்டுமில்லாமல் மொழியுடன் இணைந்த பண்பாடு, வாழ்வியல் அம்சங்களும் இடம்பெறுகின்றன. ஆதலால் தமிழியல் என்று பெயர் மாற்றுவது பொருத்தமாயிருக்குமா? தமிழ், தமிழர், தமிழ் கணிமை, தமிழிசை... போன்ற பகுப்புக்கள் அனைத்தும் இப்பகுப்பின் கீழ் பொருந்தி வருமல்லவா? இப்போதுள்ள தமிழியற் பகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழியல் வகைகள் என்னும் பகுப்புக்குள் நகர்த்தப்பட்டு அதுவும் தமிழியற் பகுப்பின் கீழ் வருவதாக அமைக்கலாம். பயனர்களின் கருத்து வேண்டப்படுகிறது. நன்றி. - கோபி 23:07, 6 ஜூன் 2007 (UTC)

கோபி, தமிழியல் தமிழுக்குள் அடங்குவதுதான் சிறப்பு. தமிழே மையம், மற்றவை எல்லாம் அதிலிருந்து விரிபவையே. எனவே தமிழ் என்பது நன்கு பொருந்தும். தனிப்பட்ட கருத்தே. --Natkeeran 23:41, 6 ஜூன் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:தமிழ்&oldid=2807716" இலிருந்து மீள்விக்கப்பட்டது