நைட்ரோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரோனேட்டின் பொதுக் கட்டமைப்பு
நைட்ரோ சேர்மங்களும் காரமும் வினைபுரிந்து நைட்ரோனேட்டு கட்டமைப்பு மாற்றியம் உருவாதல்

நைட்ரோனேட்டு (Nitronate) என்பது R1R2C=NO
2
என்ற கட்டமைப்பில் அமைந்த வேதி வினைக்குழுவைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் இச்சேர்மத்தை அசினேட்டு என்று அழைக்கிறார்கள் [1]. நைட்ரோ சேர்மத்தின் கட்டமைப்பு மாற்றியமான நைட்ரோனிக் அமிலத்தின் எதிர்மின் அயனி நைட்ரோனேட்டு ஆகும். கீட்டோன்களும் ஆல்டிகைடுகளும் அவற்றின் ஈனால் கட்டமைப்பு மாற்றிய வடிவில் அமில கார நிபந்தனைகளில் சமநிலையில் உள்ளது போல நைட்ரோ சேர்மங்களும் கார நிபந்தனைகளில் அவற்றின் நைட்ரோனேட்டுடன் சமநிலையில் காணப்படுகின்றன. α கார்பன் அல்லது நைட்ரசனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள கார்பனை காரம் புரோட்டான் நீக்கம் செய்கிறது. வேறுபட்ட இரண்டு ஒத்ததிர்வுக் கட்டமைப்பை நைட்ரோனேட்டு கொண்டுள்ளது. α கார்பன் மீது எதிர்மின் சுமையும், நைட்ரசன் மற்றும் ஒரு ஆக்சிசன் அணுக்களுக்கு இடையில் இரட்டைப்பிணைப்பும் கொண்ட கட்டமைப்பு அவற்றில் ஒன்றாகும். மற்றொன்று நைட்ரசன் மற்றும் α கார்பன் அணுக்களுக்கு இடையில் ஓர் இரட்டைப் பிணைப்பும், நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் அணுக்களுக்கு இடையில் இரட்டைப் பிணைப்பு இல்லாமலும் உள்ள கட்டமைப்பு ஆகும். நைட்ரோனிக் அமிலமும் அசி வடிவத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. நெப் வினையில் நைட்ரோனிக் அமிலங்கள் கீட்டோன்களாக தரம் குறைகின்றன. அவற்றிலுள்ள ஆக்சிசன் மீது ஆல்கைலேற்றம் செய்ய முடியும். மேலும் 1,3-இருமுனைவு வளையக் கூட்டு வினைகளில் ஐந்து உறுப்பு வளையங்கள் உருவாக்க பயன்படுத்தவும் இயலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. F. A. Carey, R. J. Sundberg (2004). Organische Chemie. Wiley-VCH Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-527-29217-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோனேட்டு&oldid=3409412" இலிருந்து மீள்விக்கப்பட்டது