நீப்பத்துறை சென்னம்மாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீப்பத்துறை சென்னம்மாள் கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், டி. அம்மாபேட்டை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும்.[1]

அமைவிடம்[தொகு]

சென்னம்மாள் கோயிலானது தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்ட டி. அம்மாபேட்டை என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இக்கோயிலானது தருமபுரி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவற்றுக்கு இடையில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் அமைந்துள்ளது. இக்கோயில் தருமபுரி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்டது என்றாலும், திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறை கிராமத்தின் வழியாக ஆற்றில் அமைக்கபட்ட தரைப்பாலம் வழியாகவே கோயிலுக்கு செல்ல முடியும்.[1]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது பரம்பரை அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[1]

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்து அம்மனை வழிபடுவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 தென்பெண்ணையாற்றின் நடுவே அமைந்துள்ள சென்னம்மாள் கோயிலுக்கு தரைப்பாலம் அமைக்க வேண்டும். டி. அம்மாப் பேட்டை பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா?, செய்திக் கட்டுரை, இந்து தமிழ் திசை, 11 சூல் 2023
  2. மலர், மாலை (2022-08-03). "நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)