நிலநடுக்கப் பதிவுக் கருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலநடுக்கப் பதிவுக் கருவி (Seismometer) பூமியின் நகர்வுகளை அளக்க பயன்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள், எரிமலை வெடிப்புகளாளும் மற்ற அதிர்வு மூலங்களாலும் ஏற்படும் அதிர்வலைகள் ஆகியவற்றை அளக்க நிலநடுக்கப் பதிவுக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் அதிர்வலைப் பதிவுகள் நிலநடுக்க ஆய்வாளர்கள் பூமியின் உள்பகுதியை வரைபடமாக்கவும், மற்றும் இந்த வெவ்வேறு மூலங்களினை கண்டறிந்து அளவிடவும் பயன்படுகிறது.