நிறுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நிறுத்தி அமைப்பு

நிறுத்தி (Brake) என்பது நகரும் அமைப்பிலிருந்து ஆற்றலை உறிஞ்சுவதன் மூலம் இயக்கத்தைத் தடுக்கும் ஒரு இயற்பியல் சாதனமாகும்.[1] இது நகரும் வாகனம், சக்கரம், அச்சு ஆகியவற்றை மெதுவாக்க, நிறுத்த அல்லது அதன் இயக்கத்தைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது, இது பெரும்பாலும் உராய்வு மூலம் செய்யப்படுகிறது.[2]

பெரும்பாலான நிறுத்திகள் பொதுவாக இரண்டு மேற்பரப்புகளுக்கு இடையில் உராய்வைப் பயன்படுத்தி நகரும் பொருளின் இயக்க ஆற்றலை வெப்பமாக மாற்றுகின்றன. இருப்பினும் நிறுத்திகளில் ஆற்றல் மாற்றத்தின் பிற முறைகளும் பயன்படுத்தப்படலாம்.

மகிழுந்தில் இருக்கும் நிறுத்தி அமைப்பின் வரைபடம்

எடுத்துக்காட்டாக, மீளுருவாக்க நிறுத்திகளில் பெரும்பாலான ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகின்றது, பின்னர் அதை பயன்படுத்த இந்த ஆற்றல் மின்கலங்களில் சேமிக்கப்படலாம். மற்ற முறைகள் அழுத்தப்பட்ட காற்று அல்லது எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி இயக்க ஆற்றலை நிலையாற்றலாக மாற்றுகின்றன. மின்னோட்ட நிறுத்திகள் காந்தப்புலங்களைப் பயன்படுத்தி வட்டு, துடுப்பு அல்லது தண்டவாளத்தில் இயக்க ஆற்றலை மின்சாரமாக மாற்றுகின்றன, பிறகு இது வெப்பமாக மாற்றப்படுகிறது. இன்னும் பிற நிறுத்தும் முறைகள் இயக்க ஆற்றலை வெவ்வேறு வடிவங்களாக மாற்றுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bhandari, V.B. (2010). Design of machine elements. Tata McGraw-Hill. பக். 472. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780070681798. https://books.google.com/books?id=M1y4_cfXy0AC&pg=PA472. பார்த்த நாள்: 9 February 2016. 
  2. "Definition of brake". The Collins English Dictionary. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறுத்தி&oldid=3923780" இலிருந்து மீள்விக்கப்பட்டது