நியாசு அசன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியாசு அசன் கான்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
தொகுதிகுந்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1918
இறப்பு2007
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

நியாசு அசன் கான் (Niyaz Hasan Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1918-2007 ஆம் ஆண்டுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும் உத்திரபிரதேசத்தில் உள்ள குந்தா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

நியாசு அசன் கான் 1962 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரையிலும், 1974 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலும் , 1980 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும் குந்தா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் [3] குந்தா தொகுதியிலிருந்து 6 சட்டசபை தேர்தல்களில் வெற்றியும் மூன்று முறை தோல்வியும் அடைந்துள்ளார். நீண்ட காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, இடையில் உத்தரப் பிரதேச சட்டசபையின் சபாநாயகராகவும் இருந்துள்ளார். [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாசு_அசன்_கான்&oldid=3827479" இலிருந்து மீள்விக்கப்பட்டது