நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, உலகின் மிகப் பழைய பல்கலைக் கழகமும், துறவிமடத் தொகுதியுமான நாளந்தாவிலிருந்து அகழ்வாராய்ச்சியின் போது பெறப்பட்ட பொருட்களையும், ராஜகிரகம் பகுதியில் இருந்து பெறப்பட்ட தொல்லியல் பொருட்களையும் கொண்டுள்ளது.

இங்குள்ள 13,463 அரும்பொருட்களில் 349 பொருட்கள் நான்கு காட்சிக் கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாளந்தாவிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும், 12-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. ராஜகிரகத்திலிருந்து எடுக்கப்பட்டவற்றுட் சில சற்று முந்தியவை.

இதனையும் காண்க[தொகு]

பீகார்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]