நாம் ஆற்றுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாம் ஆற்றுப் போர்
புசான் எல்லையோரப் போர் பகுதி

அமெரிக்க 35 ஆம் காலாட்படையின் போர்வீர்ர்கள் காட்சியும் நாம் ஆற்றில் கைப்பற்றப்பட்ட வட கொரியக் கொடியும்
நாள் ஆகத்து 31 – செப்டம்பர் 19, 1950
இடம் நாம் ஆறு, தென்கொரியா
ஐநா வெற்றி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா வில்லியம் பி. கீன் வட கொரியா பான் ஓ சான்
வட கொரியா பயேக் நாக் சில்
படைப் பிரிவுகள்
ஐக்கிய அமெரிக்கா 25 ஆம் காலாட்படைப் பிரிவு
  • 27 ஆம் காலாட்படையணி]]
  • 35 ஆம் காலாட்படையணி]]

தென் கொரியா தேசியக் காவலர்படை

வட கொரியா 6 ஆம் பிரிவு
  • 13 ஆம் காலாட்படையணி
  • 14 ஆம் காலாட்படையணி
  • 15 ஆம் காலாட்படையணி

வட கொரியா 7 ஆம் பிரிவு

  • 30 ஆம் காலாட்படையணி
  • 31 ஆம் காலாட்படையணி
  • 32 ஆம் காலாட்படையணி
பலம்
~15,000 20,000
இழப்புகள்
~275 கொல்லப்பட்டவர்
~625காயமுற்றோர்
~11,000 கொல்லப்பட்டவரும் களம்துறந்தவரும்

நாம் ஆற்றுப் போர் (Battle of Nam River) என்பது தென்கொரியாவில் உள்ள நாம் ஆற்றுக்கும் நாக்தாங் ஆற்றுக்கும் அருகில் நடந்த தொடக்க நிலை கொரியப் போராகும். இது ஐ.நா படைகளுக்கும் வட கொரியப் படைகளுக்கும் இடையில் 1950 இல் ஆகத்து 31 முதல் செப்டம்பர் 19 வரை நடந்தது. இது புசான் எல்லையோரப் போரின் ஒரு பகுதியாகும். மேலும் இது அப்போது நடந்த பல பெரும்போர்களில் ஒன்றாகும். அமெரிக்கப் படைகளும் கொரியக் குடியரசுப் படைகளும் இணைந்து, ஆற்றின் குறுக்கே வட கொரியப் படை தொடர்ந்த முற்றுகையை முறியடித்ததும், இது ஐநா தரப்புப் படைகளின் வெற்றியில் முடிந்தது.

புசானின் தென்பாங்கில் உள்ள நாக்தாங் ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான நாம் ஆற்றின்கரை நெடுக, மாசான் போர்க்களத்தில் மாசானைக் காக்க, அமெரிக்கப்படைசார்ந்த 35 ஆம் காலாட்படையணியும் 25 ஆம் காலாட்படையணியும் அணிவகுத்து நின்றன. வட கொரியாவின் மக்கள்படையின் 7 ஆம் பிரிவு ஆகத்து 31 ஆம் நாளன்று நாம் ஆற்றின் குறுக்கேபுகுந்து ஆற்றைக் கடந்துவரலானது. இதை இடைமறித்து வெற்றியுடன் 35 ஆம் காலாட்படையணி வட கொரிய முன்னேறுவதைக் கடுமையாக எதிர்த்து தடுத்து நிறுத்தியது. என்றாலும் பல ஆயிரம் வடகொரியர்கள் ஆற்றுப்போக்கில் இருந்த ஒரு துளையூடாகத் திரண்டுவந்து அமெரிக்கப் படையைச் சுற்றிவளைத்தனர். இதனால் அமெரிக்கப் படையணிகளுக்கும் வடகொரியப் படைக்கும் இடையே கும் ஆற்றின் நெடுகிலும் பின்புறமும் கடும்போர் மூண்டது. இறுதியில் வடகொரியப் படை முற்றிலுமாக அமெரிக்கப் படைவீர்ர்களால் முறியடிக்கப்பட்டது.

போரில் புசானைக் கைப்பற்ற முன்னேறிவந்த வடகொரியப் படையைப் பின்னேறச் செய்ததில் 35 ஆம் காலாட்படை பெரும்பங்கு வகித்தது. இதனால் கிடைத்த கால இடைவெளி இன்சான் எதிர்த்தாக்குதலால் எதிரியின் முறியடிப்பை மேற்கொள்ள, அமெரிக்கப்படையணிகள் நன்றாக ஆயத்தமாக உதவியது. இதனால் புசானில் வடகொரியப் படையை முற்றிலுமாகத் தோல்வியுறச்செய்தல் எளிதாக முடிந்தது. இது 35 ஆம் காலாட்படைக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் பாராட்டுரையைப் பெற்றுத் தந்தது.

பின்னணி[தொகு]

போர் வெடிப்பு[தொகு]

கொரியக் குடியரசை அதன் வடபுல நாடான கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு 1950 சூன் 25 ஆம் நாள் முற்றுகையிட்டுப் போர்வெடித்ததும் ஐநா அப்போரை எதிர்கொள்ள, தென்கொரியாவின் உதவிக்குப் படையனுப்ப முடிவு செய்தது. வடகொரிய முற்றுகையை எதிர்க்கவும் தென்கொரிய வீழ்ச்சியைத் தடுக்கவும், ஐநா உறுப்பு நாடான அமெரிக்கா கொரியத் தீவகத்துக்குப் படையனுப்ப உறுதி எடுத்தது. என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆசியக் கிழக்குப் பகுதியில் இருந்த அமெரிக்கப் படைகளின் தொகை குறைந்துவிட்டிருந்தது. அந்த நேரத்தில் அருகில் ஜப்பானில் தங்கி இருந்த படை 25 ஆம் காலாட்படையணி ஒன்றேயாகும். அப்படையின் தொகை மிக அருகி இருந்ததோடு, அதனிடம் இருந்த கருவிகளும் படைநிதி ஒதுக்கீடின்றி காலாவதியாகி விட்டிருந்தன. இருந்தாலும் உடனடியாக தென்கொரியாவுக்குச் செல்லும்படி 24 ஆம் காலாட்படைக்கு ஆணையிடப்பட்டது.[1]

கொரியத் தொடர்வண்டி நிலையத்தில் தோளில் தொஙும் பைகளுடன் படைவீர்ர்கள்
தென்கொரியா வந்துற்ற சுமித் படையணி (24ஆம் காலாட்படையணி).

வடகொரிய முன்னேற்றங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியை ஏற்க கொரியாவுக்கு அனுப்பப்பட்ட முதல் அமெரிக்கப் படையணியாக 24 ஆம் காலாட்படையணி அமைந்தது. வடகொரியப் பேரணிகட்கு மற்ற அமெரிக்கப் படையணிகள் வரும்வரை ஈடுகொடுக்கவே இது அனுப்பப்பட்டது.[2] எனவே இந்த அணி பல வாரங்கட்குத் தனித்தே போரிடவேண்டிய கட்டாயநிலை. எனவே இது வடகொரிய முன்னேற்றத்தை தடுக்கப் பெரிதும் திணறியது. இது அமெரிக்க முதலாம் குதிரைப்படையணியும் 7 ஆம் காலாட்படையணியும் 25 ஆம் காலாட்படையணியும் அமெரிக்க எட்டாம் பெரும்படையும் வரும்வரை ஈடுகொடுக்கத் தன்னால் முடிந்தவரை பாடுபட்டது.[2]வடகொரியாவும் அமெரிக்கப் படைகளும் சூலை 5ஆம் நாளன்று முதன்முதலாக மோதிய ஓசான் போரில், முன்னேறிவந்த 24 ஆம் காலாட்படையணி வடகொரியப் படைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.[3]சுமித் படையணி தோற்ற ஒரு மாதத்துக்குப் பிறகு 24 ஆம் காலாட்படையணி, எண்ணிக்கையிலும் படைக்கலங்களிலும் வலுவான வடகொரியப் படைகளால் மாறிமாறித் தாக்கப்பட்டு, தெற்கே விரட்டப்பட்டன.[4][5] 24 ஆம் காலாட்படையணிகள் சோச்சிவான் போரிலும் அடுத்த சோனான் போரிலும் பியாங்தேக் போரிலும் தொடர்ந்து தெற்கு நோக்கித் துரத்தப்பட்டன.[4]இறுதியாக இது தேயாங் போரில் சூலை 30 வரை தடுத்து எதிரிப்படையைத் தடுத்து நிறுத்த முயன்றபோது முற்றிலுமாக அழிவுற்றது.[6]அப்போது தான் அமெரிக்க எட்டாம் படைத்தொகுதி, கிட்டதட்ட வடகொரியபடைக்கு ஈடான புதிய படையணிகள் அன்றாடம் கொரியாவுக்கு வரத்தொடங்கின .[7]

வட கொரியப் படை முன்னேற்றம்[தொகு]

தேயானைக் கைப்பற்றியதும் வடகொரியப்படைகள் புசான் எல்லையோரம் முழுவதையும் சுற்றிவளைக்கலாயின. வடகொரியாவின் 4 ஆம் படைப்பிரிவும் 6 ஆம் காலாட்படையணியும் தெற்கு நோக்கி அணிவகுத்து முன்னேறி, ஐநாவின் வடக்கு அணிவகுப்பை சுற்றிவளைக்கச் சென்றன. இதனால் வடகொரியப்படைகள் மிகப் பரவலாக விரவி அமையலானது. மேலும் அவை ஐநா படையிருப்பு நோக்கி முன்னேறி தன்னைவிட பாரிய அமெரிக்க படையணிவகுப்பையும் தென்கொரியப் படைகளையையும் தொடர்ந்து தெற்குநோக்கிப் பின்னேறவும் வைத்தன.[8]

அமெரிக்கப் படைகள் தொடர்ந்து பின்னேறிவர, கடைசியில் வடகொரியப் படைகள் முன்னேற்றம் பல தாக்குதல்களுக்குப் பிரகு தென்கொரியாவின் கடைகோடித் தென்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன. மூன்றாம் படையணி, புதியதாகவந்த 29 ஆம் காலட்படையணி அனைத்துமே ஏடாங் மறைநிலைத் தாக்குதலால் வடகொரியப் படைகளால் சூலை 27 ஆம் நாளன்று முறியடிக்கப்பட்டன. இது வடகொரியப்படைக்குப் புசான் செல்வதற்கான கணவாயை உருவாக்கித் தந்தது.[9][10] அமெரிக்க 19 ஆம் காலாட்படையைப் பின்னேறச் செய்து மேற்கில் சிஞ்சுவைக் கைப்பற்றியதும் புசானை அடைதல் வடகொரியப்படைக்கு மேலும் எளியதாகியது..[11]என்றாலும் ஆகத்து 2 இல் அமெரிக்கப்படைகள் நாட்ச் போரில் வடகொரியப்படையை எதிர்த்துக் கடுமையாகத் தாக்கிப் பின்னடையச் செய்தன. அப்போரில் வடகொரியப்படைகளுக்கு பெருஞ்சேதாரம் ஏற்படவே, தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் கூடுதல் படையணிகளை எதிர்பார்த்தும் அவை மேற்கே பல நாட்களுக்குப் பின்னேறின. இது இருதரப்புப் படைகளும் புசான் எல்லையோரப் போரில் ஒன்றையொன்று எதிர்கொள்ள தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் உதவியது.[12][13]

மாசான் முற்றுகை[தொகு]

A line of soldiers and tanks hides beneath a berm
மாசான் அருகே வடகொரியப் படைகளை எதிர்பார்த்து நிற்கும் M24 சாஃபீ சிறுதகரிகள்

நாட்ச் போருக்குப் பிறகு கிடைத்த இடைவேளையில், எட்டாம் பெரும்படையின் தளபதி வால்டன் வாக்கர் வில்லியம் பி. கீன் பொறுப்பில் இருந்த 25 ஆம் காலாட்படையணியை மாசானுக்கு மேற்கில் இருந்த புசான் எல்லையோரத் தெற்குப் புறத்தில் தற்காப்பாக நிறுத்துமாறு ஆணையிட்டார். இந்த இருப்புக்கு ஆகத்து 15 இல் 25 ஆம் காலாட்படையணி நகர்ந்தது.[14]மாசானின் மேற்குத் தரப்பகுதி மிகவும் கரடுமுருடாக இருந்ததால் அந்நிலை அணிவகுப்புகளின் இருப்புகளைக் கட்டுப்படுத்தியது. சிஞ்சு கணவாயின் கிழக்கு புறத்தில் எளிதாக தற்காப்புப் போர் நிகழ்த்த ஏற்ற இடமாக மாசானின் மேற்குமலைப்புறம் அமைந்தது. அங்கே சோபுக்சானின் 2000 அடி உயரக் கொடுமுடிகள் அமைந்து, மாசானுக்கு மேற்கே வடக்கு-தெற்குக்கான ஒரே இணைப்பாக இருந்த கோமம்-நி – ஆமான் - சிண்டாங் சாலைக்குப் பாதுகாப்பாக அமைந்தன.[15]

வடக்கில், மச்சந் சிஞ்சு நெடுஞ்சாலையில் இருந்து நாம் ஆறு வரையில் பல வாட்டமான தற்காப்புப்போர் நடத்துவதற்கான இருப்புகள் அமைந்திருந்தன. இடையில் இருந்த சுங்கம்-நி மேட்டுச் சமவெளி இதற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. இது மாசான் சாலையையும் உயிரியாங்குக்கான நாம் ஆற்றைக் கடக்கும் சாலையையும் இணைக்கும் ஒரு முதன்மைச் சந்திப்பைக் கட்டுப்படுத்தும் இடமாகும். நாம் ஆறும் நாக்தாங் ஆறும் கூடுமிடத்தில் அமெரிக்க 25 ஆம் காலட்படையணியின் வலது அணிவகுப்பும் 24 ஆம் காலாட்படையணியின் இடது அணிவகுப்பும் இணைந்திருத்தல் தேவையான ஒன்றாகும். எனவே 25 ஆம் காலாட் படையணியும் மாசான்-சிஞ்சு நெடுஞ்சாலை சிண்டாங்-நி-ஆமான் சாலையைச் சந்திக்கும் கோமம்-நி சாலை இடைவெட்டுமுகத்தைக் காப்பாற்ற, அவ்விடத்துக்கு நகர்ந்தது.[15]

குறிப்புகள்[தொகு]

  1. Varhola 2000, ப. 3
  2. 2.0 2.1 Alexander 2003, ப. 52
  3. Catchpole 2001, ப. 15
  4. 4.0 4.1 Varhola 2000, ப. 4
  5. Alexander 2003, ப. 90
  6. Alexander 2003, ப. 105
  7. Fehrenbach 2001, ப. 103
  8. Appleman 1998, ப. 222
  9. Appleman 1998, ப. 221
  10. Alexander 2003, ப. 114
  11. Catchpole 2001, ப. 24
  12. Catchpole 2001, ப. 25
  13. Appleman 1998, ப. 247
  14. Bowers, Hammong & MacGarrigle 2005, ப. 145
  15. 15.0 15.1 Appleman 1998, ப. 365

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்_ஆற்றுப்_போர்&oldid=3370261" இலிருந்து மீள்விக்கப்பட்டது