நபம் ரெபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபம் ரெபியா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 சூன் 2020
முன்னையவர்முக்குத் மித்தி
தொகுதிஅருணாச்சலப் பிரதேசம்
பதவியில்
27 மே 2002 – 26 மே 2008
பின்னவர்முக்குத் மித்தி
தொகுதிஅருணாச்சலப் பிரதேசம்
பதவியில்
27 மே 1996 – 26 மே 2002
முன்னையவர்நையோடெக் யோங்காம்
தொகுதிஅருணாச்சலப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 ஆகத்து 1962 (1962-08-10) (அகவை 61)
ஓம்புலி அஞ்சல், தோய்முக்கு, பபும் பரே மாவட்டம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாஜக
பிற அரசியல்
தொடர்புகள்
இதேகா
துணைவர்நாமாம் தம்சாப்
பிள்ளைகள்4

நபம் ரெபியா (Nabam Rebia) என்பவர் அருணாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் அருணாச்சலப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக இருந்துள்ளார்.

முன்னதாக இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக, மாநிலங்களவையில் அருணாச்சல பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதியான தோய்முக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான பெமா காண்டு அரசாங்கத்தில் நகர்ப்புற வளர்ச்சி, நகரத் திட்டமிடல், வீட்டுவசதி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சராக இருந்தவர் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nabam Rebia to be BJP candidate for RS election in Arunachal Pradesh".
  2. "BJP nominee Nabam Rebia files nomination for Arunachal's lone Rajya Sabha seat". 8 June 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நபம்_ரெபியா&oldid=3620612" இலிருந்து மீள்விக்கப்பட்டது