நடுப் பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் எஃப் கென்னடியின் இயற்பெயர், நடுப்பெயர் மற்றும் குடும்பப் பெயரின் வரைபடம். இது ஆங்கிலம் பேசும் கலாச்சாரங்களுக்கு (மற்றும் சில) பொதுவான கட்டமைப்பைக் காட்டுகிறது. மற்ற கலாச்சாரங்கள் முழு பெயர்களுக்கு வேறுவிதமான கட்டமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

பல்வேறு கலாச்சாரங்களில், நடுப் பெயர் (middle name) அல்லது மத்தியப் பெயர் என்பது ஒரு நபரின் இயற்பெயருக்கும் அவரது குடும்பப் பெயருக்கும் இடையில் எழுதப்பட்ட முழுப் பெயரின் ஒரு பகுதியாகும். [1][2]

ஒரே மாதிரியான முழுப் பெயர் மற்றும் இயற்பெயர் கொண்டவர்களை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவோ அல்லது அதனைப் பொருபடுத்தாமலோ ஒருவருக்கு நடுப் பெயர் வழங்கப்படலாம். சில கலாச்சாரங்களில் குடும்பப் பெயருக்கு பின்பாகவோ அல்லது முழுப்பெயருக்கு முன்பாகவோ வழங்கப்படும் பெயர்கள் நடுப்பெயர்கள் என அழைக்கப்படுகிறது.[3]

பல்வேறு மொழிகளில் பயன்பாடு[தொகு]

ஆங்கிலம்[தொகு]

அரச குடும்பம் மற்றும் பிரபுத்துவத்தில், 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நடுப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவில், நடுப் பெயர் பெரும்பாலும் மத்திய முதலெழுத்துக்களாகச் சுருக்கப்படுகிறது (எ.கா மேரி லீ பியாஞ்சி என்பது மேரி எல். பியாஞ்சி என பயன்படுத்தப்படுகிறது).[4] இது வழக்கமாக கையொப்பமிடும் சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது அல்லது அன்றாட பயன்பாட்டில் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது (எ.கா. மேரி பியாஞ்சி என்று மட்டும் பயன்படுத்தப்படுகிறது). ஐக்கிய இராச்சியத்தில் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நடுத்தர பெயர்கள் இருக்கலாம் அல்லது நடுப்பெயர்களே இல்லாமலும் இருக்கலாம்.

பிரிட்டனில், பாரம்பரியமாக உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இரண்டுக்கும் மேற்பட்ட நடுப்பெயர்கள் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும். [5]

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Middle name". Merriam-Webster Dictionary.
  2. Carroll, John M. (2014). Confidential Information Sources: Public and Private. Elsevier. p. 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-094364-0.
  3. "Middle name (language)". Encyclopædia Britannica. 
  4. Evans, Michael Robert (2004). The Layers of Magazine Editing. Columbia University Press. p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-12860-5.
  5. Redmond, Pamela (January 21, 2013). "British Baby Names: Two middle names". Nameberry.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுப்_பெயர்&oldid=3790271" இலிருந்து மீள்விக்கப்பட்டது