தோப்பூர் திருவேங்கடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோப்பூர் திருவேங்கடம் (Thoppu Thiruvengadam)(பிறப்பு 13 ஆகத்து 1938) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராணிப்பேட்டை மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை சென்னை இராமகிருஷ்ணா ஆரம்ப பாடசாலை, கோவிந்தப்ப நாயக்கர் நடுநிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றுள்ளார். கல்லூரிக் கல்வியினை பச்சையப்பன் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் முடித்துள்ளார். திருவேங்கடம் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 கணியம்பாடி திமுக 34,435 54.11[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 416 at=416. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Missing pipe in: |page= (help); More than one of |pages= and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோப்பூர்_திருவேங்கடம்&oldid=3481471" இலிருந்து மீள்விக்கப்பட்டது