தொட்டுவா தன்வந்திரி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொட்டுவா தன்வந்திரி கோயில் இந்தியாவின் கேரளாவில் தொட்டுவா என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

எர்ணாகுளம் மாவட்டத்தில்பெரும்பாவூர்-கோடநாடு வழித்தடத்தில் கூவப்பாடி பஞ்சாயத்தில் தொட்டுவா சந்திப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது. காலடி - மலையத்தூர் வழியாக தொட்டுவா சந்திப்பு படகு ஜெட்டி மூலமாகவும் பக்தர்கள் கோயிலை அடையலாம். கோரம்பூர் மனை குடும்பத்தைச் சேர்ந்த இக்கோயில் தன்வந்திரி மூர்த்தி சேவா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.

மூலவர்[தொகு]

இங்குள்ள மூலவர் பரசுராமரால் அமைக்கப்பட்டவராகக் கருதப்படுகிறது. [1]மூலவரானதன்வந்திரி சிலை கிட்டத்தட்ட ஆறு அடி உயரம் உள்ளதாகும். இது கிழக்கு நோக்கி உள்ளது. வலது கையில் அமிர்தம், இடது கையில் சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் இச்சிற்பம் உள்ளது.

சிறப்பு[தொகு]

கோயிலின் தெற்குப் பகுதியில் கிழக்கு நோக்கிச் செல்லும் சிறிய ஓடை உள்ளது. இந்த ஓடையில் குளித்துவிட்டு கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்வதுதான் வழக்கம். பக்தர்கள் இங்கு தங்கி தியானம் செய்தால் வதம், பித்தம், கபம் போன்ற பிரச்சனைகள் தீரும் என்று நம்பப்படுகிறது. ஆயுர்வேதப் பயிற்சி செய்யும் மருத்துவர்களும் இங்கு பஜனை (பூசை, தியானம்) செய்வதற்காக வருகிறார்கள். தன்வந்திரிக்கு மிகவும் பிடித்தது 'கிருஷ்ண துளசி' ஆகும். குழந்தைப்பேற்றிற்காகஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து காணிக்கை செலுத்துகின்றனர்.புதிய காய்ச்சாத பால் இங்கு வழங்கப்படுகிறது. முக்கியமான காணிக்கை வெண்ணெய் ஆகும்.

திருவிழாக்கள்[தொகு]

இங்கு மண்டல மாசம் (ஏகாதசி மகோற்சவம்), தசாவதார மகோற்சவம், பிரதிஷ்டா தினம் உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.மலையாள மாதமான விருச்சிகத்தின் ஏகாதசியிலும், மேடம் மாதத்தில் பூயம் நட்சத்திர நாளிலும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

துணைத்தெய்வங்கள்[தொகு]

இங்கு ஐயப்பன், கணபதி, பத்ரகாளி, ராட்சசர்கள், நாகராசர்நாகயக்ஷி உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]