தேஜ் ரீட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேஜ் ரீட்டா
2022இல் நாரி சக்தி விருது பெறும் தேஜ் ரீட்டா
பிறப்பு1981/01/26
ஜிரோ, அருணாசலப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்தேஜ் ரீட்டா தாகே
பணிவேளாண் பொறியாளர்
அறியப்படுவதுஇந்தியாவின் முதல் பசலிப்பழத்தில் வைன் தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
தாகே தமோ
பிள்ளைகள்4
விருதுகள்இந்தியாவை மாற்றும் பெண்கள் விருது, நாரி சக்தி விருது
வலைத்தளம்
www.naaraaaba.com

தேஜ் ரீட்டா ( Tage Rita ) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜிரோ பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஒரு வேளாண் பொறியாளரும், இந்தியாவின் முதல் பசலிப்பழத்தில் வைன் தயாரிப்பாளரும் ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் நிதி ஆயோக் ஏற்பாடு செய்த, இந்தியாவை மாற்றும் பெண்கள் விருது மற்றும் இந்திய அரசு 2022 இல் வழங்கிய நாரி சக்தி விருது ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தேஜ் ரீட்டா தாகே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் பிறந்தார். இவர் அபதனி சமூகத்தைச் சேர்ந்தவர். அருணாச்சலப் பிரதேசத்தின் நிர்ஜுலியிலுள்ள வடகிழக்கு மண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் [2] வேளாண் பொறியாளராகப் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

2017 இல், ரீட்டா, நாரா ஆபா என்ற பெயரில் ஒருவகை மதுவான வைன் தயாரிக்கும் ஆலைத் தொடங்கினார். இதன் மூலம் உள்ளூர் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வையும் கண்டார். இவர் வாழ்ந்த பள்ளத்தாக்கில் ஏராளமாகக் காணப்படும் 'கிவி' என்ற பசலிப்பழத்திலிருந்து மதுபானம் தயாரித்தார். இதற்கான பழங்களை, இவர் தனது பழத்தோட்டம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பசலிப்பழ விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திலிருந்து நுண் கரிம முறையில் விளைந்த பழங்களை பெற்றார். இதனால், பழச் சாகுபடி செய்யும் விவசாயிகளிடமிருந்து அவர்களின் விளைப்பொருட்களை வாங்கும் நம்பிக்கையான வாங்குபவராக ஆனார். பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி வைன் தயாரித்தார். சரியான செயல்முறை மற்றும் சரியான கலவையைத் தயாரிக்க இவருக்கு ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் தேவைப்பட்டது. இவரது வைன் ஆலை 2017ஆம் ஆண்டு 20,000 லிட்டர் வைனைத் தயாரித்தது. தற்போது, 60,000 லிட்டராக, 16 தொட்டிகள் மூலம் ஒயின் உற்பத்தி செய்யப்படுகிறது. வைன் உற்பத்தியின் முதல் ஆண்டு மட்டும் 300 விவசாயிகளை ஆதரித்து அவர்களை மீண்டும் பசலிப்பழ்ம் தோட்டங்களுக்கு கொண்டு வந்தது. ஏனெனில், அவர்கள் வைன் ஆலைக்கு சுமார் 20 மெட்ரிக் டன்கள் (20,000 கிலோ) பசலிப்பழங்களை விற்றனர். மூலப்பொருளை நசுக்குவது முதல் புட்டியில் அடைப்பது வரை இந்த செயல்முறையானது நடைபெறுகிறது. இதற்கு சுமார் நான்கு மாதங்கள் ஆகும். இவ்வாறு தயாரிக்கப்படும் வைன் ஆறு முதல் எட்டு டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் சுவையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. [3] [4] [5] [6] [7] [8] [9]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

2022 அனைத்துலக பெண்கள் நாளன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்த்திடமிருந்து 2020 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதினைப் பெற்றார். மாற்றத்தை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் பெண்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த விருது வழஙக்ப்படுகிறது.[10] கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டது. மேலும், விழாவில் தடுப்பூசி போடுபவர்களாக, 72 பெண்கள் தங்கள் பணியில் சிறந்து விளங்கினர். [10]

  • வடகிழக்கு தொழில்முனைவோர் விருது
  • ஐக்கிய நாடுகள் அவை மற்றும் நிதி ஆயோக் ஏற்பாடு செய்த 2018 ஆம் ஆண்டுக்கான இந்தியாவை மாற்றும் பெண்கள் விருதை வென்றார்
  • 26 அக்டோபர் 2018 அன்று அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிசுரா அவர்களின் பாராட்டு
  • ஜிரோ பள்ளத்தாக்கின் புகழ்பெற்ற அரசு சாரா அமைப்பான ஸ்மைல் ஜிரோ மூலம் 'புதுமையான தொழில்முனைவோர்- 2017 விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தஅரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பாராட்டுச் சான்றிதழ்-2020 இவருக்கு வழங்கப்பட்டது.
  • உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கொண்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.பி.சி - 18, 2019 அனைத்துலக மகளிர் நாளன்று சிறப்பு ஒளிபரப்பிற்காக இவரது வாழ்க்கையப்பற்ரிய ஆவணப் படத்தை உருவாக்கியது. 2020இல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின பாராட்டுச் சான்றிதழ் இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2020இல் இந்திய-ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தால் 13வது தேசிய மகளிர் சிறப்பு விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Here's how Tage Rita Takhe makes Kiwi wine". https://www.cnbctv18.com/videos/entrepreneurship/heres-how-tage-rita-takhe-makes-kiwi-wine-2523881.htm. 
  2. "Arunachal's Tage Rita awarded Nari Shakti Puraskar". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
  3. "Tage Rita, Techi Anna get Vasundhara – NE Entrepreneur Awards | The Arunachal Times". 28 April 2018.
  4. "Kiwi Farmers of Arunachal's Ziro Valley Give 'Corky' Twist to Their Future!". The Better India. April 24, 2018.
  5. "Say cheers with first organic kiwi wine". www.telegraphindia.com.
  6. "Kiwi from Arunachal Pradesh's Ziro Valley now going global". April 25, 2018.
  7. "Arunachal Industries Minister launches organic Kiwi wine".
  8. "Women Transforming India Awards 2018 | NITI Aayog, (National Institution for Transforming India), Government of India". niti.gov.in.
  9. "Women Transforming India Awards 2018". Archived from the original on 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  10. 10.0 10.1 "Leaders cut across political lines to hail Indian women achievers". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜ்_ரீட்டா&oldid=3917206" இலிருந்து மீள்விக்கப்பட்டது