தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

ஆள்கூறுகள்: 26°43′27″N 80°54′14″E / 26.7241682°N 80.9038014°E / 26.7241682; 80.9038014
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
National Institute of Pharmaceutical Education and Research, Raebareli
வகைதேசிய முக்கிய நிறுவனங்களின் பட்டியல்கள்
உருவாக்கம்2008 (16 ஆண்டுகளுக்கு முன்னர்) (2008)
பணிப்பாளர்முனைவர் எசு.யே.எசு. புளோரா
அமைவிடம், ,
இந்தியா

26°43′27″N 80°54′14″E / 26.7241682°N 80.9038014°E / 26.7241682; 80.9038014
இணையதளம்niperraebareli.edu.in

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Pharmaceutical Education and Research, Raebareli) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ரேபரேலி நகரத்தில் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது லக்னோவில் உள்ள போக்குவரத்து வளாகத்திலிருந்து இயங்கும் இந்திய பொது மருந்தியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். இந்தியாவின் இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் இயங்குகிறது. மருந்து அறிவியலில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களையும் நிறுவனம் வழங்குகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகவும் வளர்ந்து வரும் இந்திய மருந்துத் தொழிலுக்கு மனித வள மேம்பாட்டில் முக்கிய பங்கும் வகிக்கிறது. மருந்து உற்பத்தியில் பரந்த அளவிலான திறன்களுடன் இந்தியாவின் அறிவியல் அடிப்படையிலான தொழில்களில் முன்னணியில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. [2] [3]

இந்த நிறுவனத்தில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.[4] லக்னோவிலுள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் இந்நிறுவனத்திற்கான வழிகாட்டி நிறுவனமாக செயல்படுகிறது. மருந்து அறிவியலில் முனைவர் பட்டப்படிப்பு, மருந்து விநியோகம், மருந்தியல் மற்றும் உயிரி-மருந்தியல் ஆகியவற்றில் நிறுவனத்திற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுக்கு மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் பயிற்சி அளிக்கிறது.

வளாகம்[தொகு]

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் லக்னோவின் ஈரா லால் யாதவ் தொழினுட்ப மற்றும் மேலாண்மை நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள ஒரு போக்குவரத்து வளாகத்தில் இயங்குகிறது. [5]

ஒத்துழைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

புற இணைப்புகள்[தொகு]

முகப்பு பக்கம்