தேசிய உணவுக் கணக்கெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய உணவுக் கணக்கெடுப்பு (National Food Survey-India) என்பது மும்பையில் உள்ள ஐஎம்ஆர்பி பன்னாட்டு அமைப்பின் மூலம் ஆண்டுக்கு இருமுறை இந்தியா முழுவதும் நடத்தப்படும் நகர்ப்புற உணவுப் பழக்கம் மற்றும் நுகர்வு பற்றிய ஆய்வாகும். 1991ஆம் ஆண்டு துவங்கிய இந்தத் தேசிய உணவுக் கணக்கெடுப்பின் கடைசிச் சுற்று கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.[1]

தேசிய உணவுக் கணக்கெடுப்பு என்பது வகைகளின் அடிப்படையில் மிகவும் விரிவான ஆய்வாகும். இது உணவு மற்றும் தகவல், உணவிவின் வகை, கொள்முதல் நடத்தை பற்றிய அடிப்படைத் தகவலை வழங்குகிறது. இந்த உணவுக் கணக்கெடுப்பு காலை உணவு தொடங்கி தானியங்கள், உண்ணத் தயாரான உணவுகள் வரையிலான 55 வெவ்வேறு தயாரிப்பு வகைகளின் தகவல்களைச் சேகரித்து, வகை, ஊடுருவல், விருப்பம், வணிகத் தேர்வு, சோதனை மற்றும் பயன்பாடு, சில உணவை ஏற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் போன்ற மாறிகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இந்த ஆய்வில் உணவுத் தொடர்பாக வெகுஜன தொடர்பு ஊடகம் சமையலறை தொடர்பான மாறிகளின் தாக்கங்களையும் ஆய்விற்கு உட்படுத்துகிறது.[2]

உணவுக் கணக்கெடுப்பு என்பது ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இதே போன்று பெயரிடப்பட்ட அரசாங்க சமூக கணக்கெடுப்பிலிருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இது ஐக்கிய இராச்சிய தேசிய உணவுக் கணக்கெடுப்பைப் போலல்லாமல், பொருளாதாரத் திட்டமிடலுக்கான தகவலை வழங்காது, உணவு விற்பனையாளர்களுக்கான ஆராய்ச்சிக்குத் தகவலாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. IMRB page about NFS http://www.imrbint.com/index.php?option=com_content&view=article&id=139:national-food-survey&catid=5:syndicated-offers&Itemid=8
  2. Interview with Surveyors www.indiamarkets.com/imo/industry/foodprocessing/foodftof11.asp