தென் சமி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென் சமி மொழி
Åarjelsaemien gïele
 நாடுகள்: நோர்வே, சுவீடன்
 பேசுபவர்கள்: 600
மொழிக் குடும்பம்:
 சமி மொழிகள்
  மேற்கு சமி மொழிகள்
   தென் சமி மொழி 
எழுத்து முறை: இலத்தீன் எழுத்துகள் 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: சுனோசா (Snåsa), நோர்வே[1]
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: sma
ISO/FDIS 639-3: sma 

தென் சமி மொழி (Southern Sami) தென்மேற்கு சமி மொழிகளுள் ஒன்றாகும். இது தீவிரமாக அருகிவரும் மொழியாகும். சுமார் 600 பேர் (சுவீடன்: 300; நார்வே; 300) சரளமாக இம்மொழியைப் பேசக் கூடியவர்களாக உள்ளார்கள்[2]. எனவே, இவ்விரு நாடுகளிலும் தென் சமி மொழி சிறுபான்மையினர் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது[3]. தென் சமி மொழி, எழுத்து வடிவம் கொண்ட ஆறு சமி மொழிகளுள் ஒன்றாகும். என்றாலும், சில புத்தகங்களே இம்மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்று, தென் சமி மொழி-நோர்வே மொழி அகரமுதலியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "European charter for regional or minority languages". Report, 05.03.2002. Ministry of Culture, Norway (March 2002). பார்த்த நாள் 8 சூன் 2014.
  2. "Saami, South". Ethnologue. பார்த்த நாள் 8 சூன் 2014.
  3. "To which languages does the Charter apply?". European Charter for Regional or Minority Languages. Council of Europe. பார்த்த நாள் 2014-04-03.
"http://ta.wikipedia.org/w/index.php?title=தென்_சமி_மொழி&oldid=1673567" இருந்து மீள்விக்கப்பட்டது