தீப்தி கிரண் மகேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீப்தி கிரண் மகேசுவரி
दीप्ति किरण माहेश्वरी
உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 6, 2021 (2021-05-06)
முன்னையவர்கிரான் மகேஷ்வரி
தொகுதிராஜ்சமந்த்
உறுப்பினர், பெண்கள் குழந்தைகள் நலக்குழு
பதவியில் உள்ளார்
பதவியில்
சூலை 12, 2021 (2021-07-12)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 ஏப்ரல் 1987 (1987-04-27) (அகவை 36)
உதயப்பூர், இராசத்தான், இந்தியா
தேசியம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
துணைவர்சாசாங்க் சிங்வி
பிள்ளைகள்1 மகன்
பெற்றோர்s
கல்விமுதுகலை வணிக மேலாண்மை, வணிக மேலாண்மை பட்டயம்
முன்னாள் கல்லூரிவெலிங்கர் மேலாண்மை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
உதயப்பூர், இந்திய மேலாண்மை நிறுவனம்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்deeptikiranmaheshwari.com

தீப்தி கிரண் மகேசுவரி (Deepti Kiran Maheshwari) அல்லது தீப்தி மகேசுவரி ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2] இவர் முன்னாள் ராஜ்சமந்த் சட்டமன்ற உறுப்பினர் கிரண் மகேசுவரியின் மகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர்.[3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மகேசுவரி 27 ஏப்ரல் 1987 அன்று உதய்பூரில் பட்டயக் கணக்காளர் சத்தியநாராயணன் மகேசுவரி[4] மற்றும் கிரண் மகேசுவரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[5][6] இவர் 2008-இல் புனேவில் இளங்கலை வணிக நிர்வாகவியல் பட்டம் பெற்றார். 2010ஆம் ஆண்டில் மும்பை வெலிங்கர் மேலாண்மை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டயப் படிப்பினை முடித்தார். இவர் உதயப்பூர், இந்திய மேலாண்மை நிறுவனத்தில், பெண் தொழில்முனைவோரில் முதுகலைப் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார். பெற்றுள்ளார் (ஆண்டு 2012).[2][6][7]

இவர் உடல்நலம் மற்றும் யோகா கருத்தரங்குகள் மற்றும் வெகுஜனத் திருமணங்கள் ஏற்பாடு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.[8] திறன் மேம்பாட்டுத் தொடர்பான வழிகாட்டியாக இவர் செயல்படுகிறார்.[9]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மகேசுவரியின் தாயார் கிரண் மகேசுவரி 2020 வரை ராஜ்சமந்த் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். கோவிட்-19[10] தொற்று காரணமாக0 30 நவம்பர் 2020 அன்று இவர் காலமானார். இதனால் 2021-இல் ராஜ்சமந்த் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தீப்திக்குப் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜ்சமந்த் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மகேசுவரி 19 பிப்ரவரி 2011 அன்று சாசாங்க் சிங்வியை மணந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rajasthan by-polls: Electors choose kin of deceased MLAs Kiran Maheshwari, Kailash Trivedi, and Bhanvar Lal Megwal". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
  2. 2.0 2.1 "Deepti Kiran Maheshwari(Bharatiya Janata Party(BJP)):Constituency- RAJSAMAND : BYE ELECTION ON 17-04-2021(RAJSAMAND) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
  3. "BJP announces Rajasthan bypoll candidates, fields ex-minister Kiran Maheshwari's daughter". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-03-26. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
  4. "Satyanarayan B. Maheshwari - Biography". www.marketscreener.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  5. 5.0 5.1 "Deepti Kiran Maheshwari(Bharatiya Janata Party(BJP)):Constituency- RAJSAMAND : BYE ELECTION ON 17-04-2021(RAJSAMAND) - Affidavit Information of Candidate:". myneta-info.translate.goog. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  6. 6.0 6.1 "जानिए दीप्ति किरण माहेश्वरी को, 2004 में पहली बार चुनावी जनसम्पर्क किया". Amolak News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-25. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  7. "About - Deepti Kiran Maheshwari, BJP". www.deeptikiranmaheshwari.com. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  8. "Deepti Kiran Maheshwari (MLA Rajsamand), MLA Deepti Maheshwari, MLA Rajsamand". Rajasthan Link (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "Deepti Maheshwari - Ek kadam" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-08-15. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  10. "Rajasthan BJP MLA Kiran Maheshwari, Covid-19 positive, passes away; PM Modi, Lok Sabha speaker condole demise". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
  11. "Rajsamand Assembly Election 2023 Result Live Updates: Check Latest Trends From Rajasthan Election Results". TimesNow (in ஆங்கிலம்). 2023-12-03. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்தி_கிரண்_மகேசுவரி&oldid=3897175" இலிருந்து மீள்விக்கப்பட்டது