திலீபனுடன் 12 நாட்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திலீபனுடன் 12 நாட்கள் என்னும் நூல் மு. வே. யோ. வாஞ்சிநாதன் என்பவரால் எழுதப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் முதல் பதிப்பாக 26. செப்டம்பர். 1988 அன்று வை. கோபால்சாமி தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பாக 1992இல் வெளிவந்தது. அண்மையில் 2011இல் விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் வெளியீடாக வெளியிடப்பட்டது.

நூல் பொருள்[தொகு]

தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் 15. செப்டம்பர். 1987 அன்று, நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தைத் துவக்கினார். அவர் மேற்கொண்ட இந்த உண்ணாவிரத போராட்டத்தில், 12 நாட்கள் சொட்டு நீர் கூட அருந்தாமல் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து, 26. செப்டம்பர். 1987 அன்று ஈகச்சாவு அடைந்தார். அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது அவரின் அருகில் இருந்து, நேரில் கண்ட உண்மை அனுபவங்களை கட்டுரைகளாக ஆசிரியர் எழுதியுள்ளார் நூலாசிரியர்.[1].

நூல் அமைப்பு[தொகு]

இந்நூல் நாள் குறிப்பை ஒத்ததாக உள்ளது. உண்ணாவிரத்தின் முதல் நாள், இரண்டாம் நாள், என்று 12 நாட்களில் அவர் கண்டதையும் கேட்டதையும் நாள்வாரியாக எழுதியுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. திலீபனுடன் 12 நாட்கள்,மு.வே.யோ.வாஞ்சிநாதன். முன்னுரை

வெளி இணைப்புகள்[தொகு]

  • நூல் வாசிக்க இங்கே சுட்டவும் [1]