திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி (திருவுறந்தைப் பதிற்றுப்பத்தந்தாதி) ஒரு சிற்றிலக்கியம். இதனை இயற்றியவர் சி. வாஞ்சைலிங்க வைத்தியநாத செட்டியார். இது உறையூரிலுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்டுள்ளது இதனைத் திருத்தவத்துறை நிலக்கிழார் தம்பாச்சியாபிள்ளை தம் பொருட்செலவில் பதிப்பித்துள்ளார். [1]

விளக்கம்[தொகு]

"பதிற்றுப்பத்து" என்னும் தொடர் நூறு என்னும் எண்ணிக்கையைக் குறிக்கும். சேரர்களைப் போற்றும் சங்க கால நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. இந்த நூலுக்கு பூவை. கலியாணசுந்தர முதலியார், நாராயண சரவணர், சாமிநாத பிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் பாடிய சிற்றப்புப் பாயிரப் பாடல்கள் உள்ளன. அவை அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.

பாடல் எடுத்துக்காட்டு[தொகு]

வண்ணமா மறையோன் முன்னா வானவர்க்கு அரசே போற்றி
வண்ணம் ஆர் அணங்கை ஏந்தும் மாதவன் போல் வருந்தா
வண்ணமா உறந்தை தன்னில் வந்து அடி காட்டி ஆண்ட
வண்ணம் ஓர் ஐந்தும் கொண்ட வள்ளலே போற்றி போற்றி [2]

இதனையும் காண்க[தொகு]

பழநிப் பதிற்றுப்பத்து அந்தாதி

மேற்கோள்[தொகு]

  1. உறையூர் வித்துவான் சி. வாஞ்சைலிங்க வைத்தியநாத செட்டியார் இயற்றிய உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி - திருத்தவத்துறை மிராசுதார் தம்பாச்சியாபிள்ளை அவர்களால் சென்னை மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது - சார்வரி ஆண்டு, ஆவணி மாதம்
  2. பாடல் 92