பழநிப் பதிற்றுப்பத்து அந்தாதி
பழநிப் பதிற்றுப்பத்து அந்தாதி என்னும் நூல் [1] பழனி முருகனைப் போற்றிப் பாடப்பட்ட நூல். இதனை இயற்றியவர் சுப்பிரமணிய ஐயர். இந்த நூலுக்குச் பலரது சாத்துகவிகள் உள்ளன. [2]
பாடல் - எடுத்துக்காட்டு
[தொகு]1
உரைக்கரிய திருப்புகழை உரைத்து உரைத்து உன் திரு உளத்தைக்
கரைக்கவும் என்பொருட்டு அஃது கரையாத பரிசு என்னோ
பரைக்கு ஒரு மைந்தா பழநிப் பண்ணவனே நீ இறை கொள்
வரைக் குலத்துள் ஒரு வரையோ நின் மனதும் வகுத்தருளே [3] [4]
2
உள்ளபடி சொல்வது இது உன் திருவடிக்கு
எள் அளவும் அன்பு செயல் என்றும் இலன் என்னை
அள்ளல் நரகத்திடை அமிழ்த்தல் ஒழி பின்னர்
விள்ளரும் எழில் பழநி வேந்த புகல் நீயே [5]
3
ஆளாகி, நின்ன சிறு தொண்டு இயற்றி அறியாத பொய்யன் எனினும்
மீளாத காதலொடு நின்னை நாளும் வினையேன் வழுத்தவிலேயோ
வாளா இருத்தல் அழகோ அருட்கு மயில் ஏறி ஆள வருவாய்
கேளாது நல்கும் பழநிக்கண் ஏய்ந்த கிரியில் கலந்த துரையே [6]
இதனையும் காண்க
[தொகு]திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி
மேற்கோள்
[தொகு]- ↑ பழநிப் பதிற்றுப்பத்து அந்தாதி - இயற்றியவர் முசிரியில் இருக்கும் வித்துவான் பிரம்மஸ்ரீ தே குரு சுப்பிரமணிய ஐயர் - முசிரியில் இருக்கும் திருத்தாந்தோணி அப்பாவுப்பிள்ளை மகன் வழக்கறிஞர் கல்யாணசுந்தரம்பிள்ளை வேண்டுகோளின்படி இயற்றப்பட்டது. - இவரால் பதிப்பிக்கப்பட்டது. - சென்னை : பண்டித மித்திர யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. - பதிப்பு : சுபகிருது ஆண்டு ஆவணி மாதம்
- ↑
- சென்னை அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார்
- குரு சுப்பிரமணிய பாரதி இந்த நூலை இயற்றினான்
- இந்த அந்தாதி அணி எழிலினைக் காட்டுகிறது
- சேலம் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் சரவணப்பிள்ளை
- இது அந்தாதி மாலை பாடியவன் சுப்பிரமணிய பாரதி
- காங்கயம் அஷ்டாவதானம் சேஷாசலநாயுடு
- நாமக்கல் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்
- முசிரி வித்துவான் கு அ ஆறுமுகப் பிள்ளை
- முசிரி வீ அப்பாயி நாயுடு
- திருநயம் அருட்கவி நரசிம்ம பாரதி
- பரப்பங்குடி சு கோபாலய்யங்கார்
- மதுரை மாவட்டம் தேவகோட்டை வே. ஆ. தி. மாயாண்டி செட்டியார் மகன் சிதம்பர செட்டியார்
- ↑ பாடல் 56
- ↑ இதன் கருத்து : நாவால் உரைப்பதற்கு அருமையான திருப்புகழைச் சொல்லிச் சொல்லி உன் மனத்தைக் கரைக்க முயன்றேன். உன் மனம் என்பொருட்டு கரையவில்லை. நீ இருக்கும் பழநி மலைதான் கல்லாக இருக்கிறது. உன் மனமுமா கல்?
- ↑ பாடல் 90
- ↑ பாடல் 94